Go to full page →

வாலிபர்களும் போதையின் நோய்க்குறிகளும்!, மே 11 Mar 261

“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” - பிரசங்கி 11:9. Mar 261.1

சாத்தானே இந்த அண்டசராசரத்தின் முதல் கலகக்காரன். பரலோகத்தினின்று அவன் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து, மானிடக் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் தன்னைப் போல் மாற்றத்தக்கதாக, தேவனை ப்கைப்பவர்களாகச் செய்யவேண்டு மென்று வகைதேடி அலைகிறான். சட்டத்திற்குப் புறம்பான இன்சுவை கவர்ச்சிகளில் திளைக்கச்செய்து, தேவனுடைய பிரமாணங்களை மீறும்படி வழிநடத்தி, மனிதரை அழிப்பதற்காக அவன் திட்டங்களை உருவாக்கினான். தடைசெய்யப்பட்ட பழத்தைப் புசிக்கும்படி ஆதாமையும் ஏவானையும் சோதித்தான்; அப்பொழுது, அவர்களது விழுகையை நிறைவேற்றினான். ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களும் வெளியேற வேண்டியதாயிற்று. “நான் மட்டும் ஆதாம் இருந்த இடத்தில் இருந்திருப்பேனானால், இத்தகைய எளிய சோதனையில் நான் ஒருபோதும் விழுந்திருக்கமாட்டேன்” என்று எத்தனையோபேர் கூறுகிறார்கள்! இவ்வாறு, தற்புகழ்ச்சி செய்கின்ற உங்களுக்கு, உங்களது நோக்கத்தின் ஆற்றலைக் காட்டுவதற்கும், உபத்திரவத்திற்கு அடியிலும் கொள்கைக்காக நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தைக் காட்டுவதற்கும், மேம்பட்ட ஒரு சந்தர்ப்பம் காத்துக்கொண்டிருக்கிறது. உங்களது வாழ்க்கையில் தேவன் ஒரு பாவத்தையும் காண்கிறதில்லையா?... Mar 261.2

எங்கணும் வாலிபர்களை சிக்கவைத்து, அழிவின் பாதையில் நடத்திச்செல்ல சாத்தான் வகைதேடிக்கொண்டிருக்கிறான். அவன் அவர்களது பாதங்களை ஒருமுறை அந்த வழியிலே நிலைப்படுத்தி விடக்கூடுமானால், அவர்களை கீழ்நோக்கிச்செல்லும் இழிவான பாதையிலே துரிதமாக நடக்கச்செய்து, அவனுக்கு இரையாகி விட்டவர்கள், தங்களுக்குமுன்பாக தேவபயம் அற்றவர்களாக, மனச்சாட்சியிலே மென்மைத் தன்மையை இழந்து, ஒழுக்கங்கெட்ட ஒரு நிலையிலிருந்து, இன்னொரு ஒழுக்கங்கெட்ட நிலைக்குச் செல்லும்வரை நடத்திச்செல்கிறான். சுயக்கட்டுப்பாட்டை மெல்ல மெல்லக் குறைத்துக்கொள்ளும் பயிற்சிக்கு இவர்கள் ஆளாகிறார்கள்; மேலும், மது, சாராயம், புகையிலை மற்றும் அபின் ஆகிய போதைகளுக்கு அடிமைகளாகி, ஒரு இழிநிலையிலான கட்டத்தினின்று இன்னொரு இழிநிலைக்குச் செல்கிறார்கள். இன்சுவை நுகர்ச்சிக்கு அடிமைக்களாகிறார்கள். முன்பு மதித்த ஆலோசனையை இப்பொழுது இகழ்ச்சிசெய்யக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். வீராப்பு மிக்க தோற்றத்தைக் காட்டியவர்களாக விடுதலையைக்குறித்துப் பேசி பெருமைபாராட்டுகிறார்கள்; ஆனால், அவர்களே சீர்கேடான நிலைக்கும் சேவகர்களாக இருக்கிறார்கள். அவர்களது விடுதலை என்ற வார்த்தையின் பொருள் என்னவென்றால், தன்னலத்திற்கும், இழிந்த இன்சுவை நுகர்ச்சிக்கும், சீர்கேடு அடைந்த காம நிலைக்கும் அடிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதேயாகும். Mar 261.3

சாத்தான் மானிட இனம் அனைத்தையுமே தனது குடிமக்களாக வைத்துக்கொள்ளவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறான்; ஆனால், சத்துருவிடமிருந்து மனிதன் மீட்கப்படவேண்டுமென்றும், விழுந்து போன மானிட இனம் தேவனுடைய ஒழுக்கத்தின் சாயலைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றும், அளவற்ற கிரயத்தை கிறிஸ்து செலுத்தியிருக்கிறார்... விழுந்துபோன மக்கள் கிறிஸ்துவின் மூலமாக, பிதாவிடம் செல்லும் உரிமையைப் பெற்றுக்கொள்ளவும், சிலுவையில் அடிக்கப்பட்டு, உயிர்த்தெழுந்த பெலனடையும்படி யாகவும் கிருபையைப் பெற்றுக்கொள்ளலாம்.⋆ Mar 262.1

வாக்குத்தத்த வசனம்: Mar 262.2

“நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்” - சங்கீதம் 138:7. Mar 262.3