Go to full page →

அஞ்ஞான வல்லமையின் வெளிப்படையான அணிவகுப்பு!, மே 12 Mar 263

“ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகிய, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங் காலம் வரும்.” - 2 தீமோத்தேயு 4:3,4. Mar 263.1

மிக வேகமாக மனிதர் தாங்கள் தெரிந்துகொண்ட கொடியின் கீழ் அணிவகுத்துக்கொண்டிருக்கிறார்கள். நிம்மதியின்றி தங்களது தலைவர்களது இயங்கும் வழிமுறைகளை விழிப்போடு கவனித்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றுமுள்ளோர் நமது ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்துக்கொண்டும், ஊழியஞ்செய்து கொண்டுமிருக்கிறார்கள். முதன்முதலில் மருளவிழுந்துபோன அந்த மாபெரும் படைத்தலைவனுக்கடியில், அடுத்த கூட்டத்தார் துரிதமாக அணிவரிசையில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். மனித வடிவில் ஒரு தேவனுக்காக நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேடுகிற ஒருவரின் உருவில் சாத்தான் தோற்றமளிக்கிறான். திரளான மக்கள் சத்தியத்தை தள்ளிப்போட்டதினால் இவ்வாறு ஏமாற்றப்படுவார்கள்; எனவே, போலியை ஏற்றுக்கொள்வார்கள். மானுடம் தேவனைப்போன்று போற்றப்படுகிறது. Mar 263.2

முடிவின் நேரத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும்போழுது, அஞ்ஞான வல்லமையானது வெளிப்படையானவிதத்தில், பெரிய அளவில் மேலும் மிகப்பெரிய அளவில் அணிவகுத்துச்செல்லும். அஞ்ஞான தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவிதத்தில் தங்களது வல்லமையை வெளிப்படுத்தி, உலகின் பட்டணங்களிலே தங்களைப் பகட்டாக வெளிப்படுத்திகாட்டும். இந்தவிதமான சித்திரிப்புகள் ஏற்கெனவே நிறைவேறத் துவங்கிவிட்டன. தேவனுடைய மக்களை துன்புறுத்துவதில் தனிச்சிறப்போடு விளங்கியவர்களது கவர்ச்சி மிக்க செல்வாக்கும், இழிவான குணமும் பலவகையான உருவங் களின்மூலமாக கர்த்தராகிய இயேசுவால் யோவானுக்குக் காட்டப்பட்டது. இந்த பூமியின் வரலாற்றை முடிவிற்குக் கொண்டுவரும் காரியத்தில் பெரும்பாலும் காட்டப்படுகின்ற அந்த “அக்கிரமத்தின் இரகசியத்தை” குறித்து கவனமாக ஆராய்ச்சிசெய்து கண்டறிவதற்கு, அனைவருக்கும் ஞானம் தேவை...நாம் வாழ்ந்துவருகிற இந்தக் காலத்திலேயே ஆண்டவர் தமது மக்களை அழைத்து, அவர்கள் எடுத்துச்செல்வதற்கான ஒரு தூதை அவர்களுடைய கரங்களில் கொடுத்திருக்கிறார். ஞாயிறு சட்டத்தை ஒரு குறிப்பிடத்தக்க வல்லமையாக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைத்து, படைப்பின் ஓய்வுநாளாகிய உண்மையான ஓய்வுநாளைக் கைக்கொள்வதின்மூலம், அவரைக் கனப்படுத்துவதில் திடமாக நிற்கின்ற தேவனுடைய மக்களை ஒடுக்கிய, அந்தப் பாவ மனிதனின் கொடுமையை வெளிப்படை யாகக் காட்டுவதற்கு அவர்களை அழைத்திருக்கிறார்... Mar 263.3

உலகத்தின் இறுதி நாட்களின் ஆபத்துகள் நம்மீது வந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய ஊழியத்தின்போது, மக்கள் எத்தகைய ஆபத்திலிருக்கிறார்கள் என்பதைக்குறித்து நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும். தீர்க்கதரிசனம் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிற பக்திவிநயமான காட்சிகள், தொடாமல் விட்டு விடப்படக்கூடாது. நமது மக்கள் பாதி அளவிற்காவது விழிப்புடையவர்களாயிருந்து, வெளிப்படுத்தின விசேஷத்தில் விளக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிற சம்பவங்கள் எவ்வளவு நெருங்கிவந்துவிட்டது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்களானால், நமது சபைகளிலே ஒரு சீர்திருத்தம் உருவாகிவிடும். அதிகமான மக்கள் தூதை விசுவாசிப்பார்கள்; நமக்கு இழுக்க இனி நேரமில்லை; கணக்கு ஒப்புவிக்கவேண்டிய வர்களைப்போன்று, ஆத்துமாக்களுக்காக நாம் விழிப்போடிருக்க வேண்டுமென்று தேவன் நம்மை அழைக்கிறார்.⋆ Mar 264.1

வாக்குத்தத்த வசனம்: Mar 264.2

“நான் துன்பத்தின் நடுவில்நடந்தாலும் நீர் என்னை உயிர்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.” - சங்கீதம் 138:7. Mar 264.3