Go to full page →

வானங்களிலே அடையாளங்கள்!, மே 22 Mar 283

“கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.”- யோவால் 2:31. Mar 283.1

ஒலிவ மலையிலே, மீட்பர் தமது சீடர்களோடு நடத்திய உரையாடலிலே, சபைக்கு வரப்போகின்ற நீண்டகால உபத்திரவத்தைப் பற்றி விவரித்தார்; அதாவது, பாப்பு மார்க்கத்தால் கொடுக்கப்படும் 1260 ஆண்டு உபத்திரவம்பற்றிக் கூறினார். மேலும் அந்த உபத்திரவக்காலம் குறைக்கப்படும் என்றும் வாக்குத்தத்தஞ் செய்தார். இவ்வாறு அவரது வருகைக்கு முன்னர், நடைபெறவிருக்கும் சில சம்பங்களைப்பற்றி குறிப்பிட்டார். இந்தச் சம்பவங்களில் முதலாவதாகக் காணப்படவிருக்கின்றதான வேளையை உறுதிப் படுத்தினார். “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்…” —மத்தேயு 24:29. 1260 நாட்கள் அல்லது ஆண்டுகள், 1798-ல் முடிவடைந்தது. இதற்கு கால் நூற்றாண்டிற்கு முன்னரே, உபத்திரவம் ஏறக்குறைய முற்றிலுமாக முடிவடைந்துவிட்டது. இந்த உபத்திரவத்திற்குப் பின்னர், கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி சூரியன் அந்தகாரப்படவேண்டும். 1780-ம் ஆண்டு மே 19-ல், இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலை அடைந்தது. Mar 283.2

“முற்றிலுமாக இல்லாவிட்டாலுங்கூட, ஏறக்குறைய முமுமையுமாக விளங்கிக்கொள்ளமுடியாத-இன்னும் விளக்கிக் கூறப்படாத, குறிப்பிடத்தக்க காட்சியாக…1780-ம் ஆண்டு மே 19-ல் காணப்பட்ட அந்த இருண்ட நாள் இருக்கின்றது. நியூ இங்கிலாந்து பகுதியில் பார்க்கத்தக்கதாக வானங்களும் வளிமண்டலம் முழுவதும் முற்றிலும் காரணம் கூறப்படாத அளவிற்கு இருண்டது” - R.M.Devens, Our First Century, p.89. Mar 283.3

அந்த நாளின் அடர்ந்த இருளுக்குப் பின்னர், மாலை நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, ஆகாயம் ஓரளவு தெளிவாகக் காணப்பட்டது. சூரியனானது இருண்டு கனத்த ஒரு படலத்தால் மறைக்கப்பட்டிருந்தபோதிலும், அது காணப்பட்டது. “சூரிய அஸ்தமனத்திற்குப்பின் மீண்டும் மேகங்கள் தலைக்கு மேலாக வந்தன. வெகு துரிதமாக இருள் கவிழ்ந்தது.” “இரவின் இருளானது அந்த நாளில் பகலைவிடச் சாதாரணமாகவும், பயங்கரமற்றதாகவுமிருந்தது (அதாவது பகல் மிகவும் இருண்டு காணப்பட்டது); எனினும் ஏறக்குறைய அன்று ஒரு முழு நிலவு காணப்பட்டது. அந்த இரவிலே, எந்தப் பொருளும் தெளிவாகக் காணப்படவில்லை. செயற்கையான விளக்கின் உதவியால் மாத்திரம்மே காண முடிந்தது…” — Isaiah Thomas. Massachusetts Spy; or American Oracle of Liberty, Vol.10.No.472(May 25,1780). Mar 283.4

இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர், யோவேல் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளின் எதிரொலியைப்போலவே, இந்தச் சம்பவத்தை கண்ணால் கண்டவர்களால் கொடுக்கப்பட்ட வர்ணனை இருந்தது. “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்” —யோவெல் 2:31. Mar 284.1

கிறிஸ்து தமது மக்களை, தமது வருகைக்கான அடையாளங்களை விழிப்போடு கவனிக்கவேண்டுமென்றும், மேலும் வரப்போகிற தங்களது இராஜாவைக்குறித்த அடையாளங்களை நோக்கிப்பார்த்து, களிகூரவேண்டுமென்றும் கூறியிருந்தார்.⋆ Mar 284.2

வாக்குத்தத்த வசனம்: Mar 284.3

“விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.” - நீதிமொழிகள் 16:20. Mar 284.4