Go to full page →

கடைசி நாட்களில் இரத்தசாட்சிகள்!, ஜூலை 10 Mar 381

“அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.” —யோவான் 16:2 Mar 381.1

இரண்டு கொடிகளில் ஒன்றினுக்கடியிலுள்ள வரிசையிலே இந்த உலகின் ஒவ்வொரு தனிநபரும் நிற்கவைக்கப்படுவார். Mar 381.2

இரண்டு சேனைகளும் தெளிவாகத் தெரிகின்றவிதத்தில் தனித்து நிற்கும். இந்த வித்தியாசமானது, மிகவும் குறிப்பிட்ட விதத்தில் தெளிவாகத் தெரிவதினால், சத்தியத்தைப்பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட மக்கள், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும் மக்கள் கூட்டத்தோடு வந்து நிற்பார்கள். இறுதியாக, முடிவடைகின்ற அந்தப் போராட்டத்திற்குமுன்பு, இந்த மேன்மையான பணி ஒன்று யுத்த களத்திலே நடைபெறவேண்டியதிருக்கும் பொழுது, அநேகர் சிறையிலடைக்கப்படுவார்கள். பட்டணங்களிலிருந்து, நகரங்களிலிருந்து உயிர் தப்புவதற்காக ஓடிப்போவார்கள். சத்தியத்தின் பாதுகாவலர்களாக நிற்பதைத் தெரிந்து கொண்ட அநேகர், கிறிஸ்துவிற்காக இரத்தசாட்சிகளாவார்கள். Mar 381.3

தேவனுடைய பிரமாணத்தின் மீறுதலாக, பாப்பானவரின் அமைப்பை சட்டத்தின்மூலம் நடைமுறைப்படுதுவதிலே, நமது நாடு (U.S.A.) நீதியினின்று முற்றிலுமாகத் தனது தொடர்பைத் துண்டித்துக்கொள்ளும். Mar 381.4

எருசலேமிற்கு வரப்போகின்ற அழிவைச் சுட்டிக்காட்டத்தக்கதாக, ரோம சேனை எருசலேமை நெருங்கிவரும் சம்பவமானது, சீடர்களுக்கு ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப்போன்று, தேவனுடைய பொறுமை எல்லையை எட்டிவிட்டது என்பதை இந்த மருளவிழுகையானது, ஒரு அடையாளமாக நமக்குக் காட்டுகிறது; மேலும்; ( நமது) தேசத்தின் அக்கிரமத்தின் அளவு நிறைவாகிவிட்டது என்றும், இரக்கத்தின் தூதன் இனி ஒருபோதும் திரும்பிவராமல் பறந்துசெல்வதற்கு ஆயத்தமாகிவிட்டான். என்றும், இந்த மருளவிழுகை அதற்கு அடையாளமாக இருக்கும். யாக்கோபின் இக்கட்டுக்காலம் என்று தீர்க்கதரிசிகளால் விவரிக்கப்பட்ட அத்தகைய வேதனை, துன்பம் ஆகியவை நிறைந்த காட்சிகளுக்குள் தேவனுடைய மக்கள் வீழ்த்தப்படுவார்கள். துன்பப்படுகிற உத்தமமான மக்களின் கூக்குரல் வான பரியந்தம் எட்டினது. பூமியினின்று ஆபேலின் இரத்தம் முறையிட்டதுபோல, இரத்தசாட்சிகள் கல்லறைகளினின்றும், கடலிலுள்ள சவக்குழிகளினின்றும், மலைகளிலுள்ள அடிநிலக் குகைகளினின்றும், மடங்களின் அடிநிலக் கல்லறைக்கூடங்களினின்றும், “பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்” (வெளிப்படுத்தல் 6:10) என்ற அழுகையின் கூக்குரல்கள் தேவனை நோக்கி சென்றது. Mar 381.5

ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபொழுது, வெளிப்படுத்தின விசேஷகனாகிய யோவான் தேவனுடைய வசனத்திற்காகவும், இயேசு கிறிஸ்துவைக்குறித்த சாட்சிக்காகவும் கொல்லப்பட்ட கூட்டத்தார் பலிபீடங்களுக்கு அடியில் இருப்பதை தரிசனத்தில் கண்டார். இதற்குப் பிறகு, வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருந்த காட்சிகள் தோன்றின; அப்பொழுது, உத்தமமாகவும், உண்மையாகயும் இருப்பவர்கள் பாபிலோனிலிருந்து வெளியேறிவரும்படி அழைக்கப்பட்டார்கள். Mar 382.1

எடுக்கப்பட்ட உயிரை கிறிஸ்து மீண்டும் கொடுப்பார்; ஏனெனில், அவர் ஜீவனைக் கொடுக்கிறவராக இருக்கிறார். அவர் நீதிமான்களை நித்திய வாழ்வினால் அலங்கரிப்பார்.⋆ Mar 382.2

வாக்குத்தத்த வசனம்: Mar 382.3

“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்: உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது” — ஏசாயா 49:16. Mar 382.4