Go to full page →

முடிவின் ஆரம்பம்!, ஜூலை 26 Mar 413

“கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.” - எசேக்கியேல் 7:5,6. Mar 413.1

தர்க்கரீதியான-பயம் நிறைந்த இந்தக் காரியத்தில்,உலகம் முழுவதும் ஒன்றாகச் சேரவிருக்கிறது. தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக உலகின் அனைத்து வல்லமைகளும் ஒன்று சேர்ந்து, “அதாவது சிறியோர்-பெரியோர், ஐசுவரியவான்கள்-தரித்திரர், சுயாதீனர்-அடிமைகள்” அனைவரும், இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பொய்யான ஓய்வுநாளை ஆசரிப்பத்தின் மூலம், சபையின் பழக்கவழக்கத்திற்கு ஒத்திசைவாக நடக்கவேண்டும் என்று கூறியது. இதற்குச் சம்மதிக்க மறுப்பவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும். இறுதியிலே அவர்கள் மரண தண்டனையைப் பெறவேண்டியவர்கள் என்று அறிவிக்கப்படும். வேறுவகையில் பார்க்குமிடத்து, படைத்தவரின் இளைப்பாருதலின் நாளானது, தேவ பிரமாணத்தின் ஆணையாக, கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறது. அதின் கட்டளையை மீறுகிற அனைவருக்கும் எதிராக, உக்கிரமான கோபம் உண்டாகும் என்று எச்சரிக்கிறது. Mar 413.2

இவ்வாறு தர்க்கரீதியான அடிப்படையிலான இந்தக் காரியம் தெளிவாக மனிதனுக்குமுன் கொண்டுவரப்பட்டபோது, யாரெல்லாம் மனிதனால் இயற்றப்பட்ட சட்டதிற்க்குக் கீழ்ப்படிவதற்க்காக தேவனுடைய பிரமாணத்தைக் காலின்கீழ்ப்போட்டு மிதிக்கிறார்களோ, அவர்கள் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்கிறார்கள். தேவனுக்குப் பதிலாக, எந்த வல்லமைக்கு பற்றுறுதியோடு இருப்பதை ஒரு நபர் தெரிந்துகொள்கிறாரோ, அவர் அந்த வல்லமையின் அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறார்... Mar 413.3

ஒரு நபரின் உத்தமமான குணத்தைப் பரிசோதிப்பதற்கான பரீட்சை, ஓய்வுநாள் ஆசரிப்பே! குறிப்பாக, சத்தியத்தின் இந்தப் பகுதியே எதிர்த்து வாதிடும் காரியமாக இருக்கிறது. இறுதிச் சோதனை மனிதர்மீது தாக்கத்தை ஏற்படுத்தும்பொழுது, தேவனை சேவிப்பவர்களுக்கும், தேவனை சேவிக்காதவர்களுக்குமிடையில் வேறுபாட்டை காட்டத்தக்கதான இடத்தில தெளிவான கோடு வரையப்படும். நாட்டின் சட்டத்திற்கு சம்மதித்து, பொய்யான ஓய்வுநாளை ஆசரிப்பது, நான்காம் கட்டளைக்கு விரோதமாக இருக்கும்பொழுது, தேவனுக்கு எதிராளியான ஒரு வல்லமைக்கு பற்றுறுதியோடு இருப்பதற்கான உறுதிமொழிபோன்று இருக்கும். தேவனுடைய பிரமாணதிற்க்குக் கீழ்ப்படிந்து, உண்மையான ஓய்வுநாளை ஆசரிக்கும் செயலானது, படைத்தவருக்கு உத்தமமாக இருப்பதற்கான ஒரு சான்றாக இருக்கும். ஒரு வல்லமையை ஏற்றுக்கொள்ளும்பொழுது, அடுத்த வகுப்பார் தெய்வீக அதிகாரத்திற்கு பற்றுறுதியோடு இருப்பதின் அடையாளமாக, தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்கிறார்கள். Mar 413.4

இதுவரை மூன்ராம் தூதனின் சத்தியங்களை எடுத்துக்கூறுகிறவர்கள், வெறுமனமே பீதியை பரப்புகிறவர்களென்று கருதப்பட்டுவந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் முக்கியக் காரியமானது, மிகவும் விரிவாகக் கிளர்ந்தெழும்போது, இவ்வளவு காலம் சந்தேகிக்கப்பட்டு, நம்பப்படாமலிருந்த சம்பவமானது, நெருங்கிவருவதைக் காணும்பொழுது, மூன்றாம் தூதனின் தூது, இதுவரைக்கும் முன்பு ஒருபோதும் இருந்திராத ஒரு விளைவை உருவாக்கும்.⋆ Mar 414.1

வாக்குத்தத்த வசனம்: Mar 414.2

“...அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.” - சங்கீதம் 97:10. Mar 414.3