Go to full page →

அவரது பிரமாணத்தோடு இசைந்து வாழ்தல்!, ஆகஸ்டு 11 Mar 445

“எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக்கைக்கொள்ளுவேன்.” - சங்கீதம் 119:34. Mar 445.1

புதிய பிறப்பின் அனுபவத்திலே, இதயமானது எப்படி தேவனோடு இசைந்திருக்கும் படியாகக் கொண்டுவரப்படுகிறதோ, எப்படி அவரது பிரமாணத்திற்கு ஒத்த இசைவோடு கொண்டுவரப்படுகிறதோ அதைப்போல, இத்தகைய மாபெரும் மாறுதலானது, ஒரு பாவியிடம் நடைபெறும்பொழுது, அவன் மரணத்தினின்று ஜீவனுக்கும், பாவத்தினின்று பரிசுத்தத்திற்கும், மீறுதல், கலகம் ஆகியவைகளினின்று கீழ்ப்படிதலிற்கும், வாய்மை தவறாதிருக்கும் நிலைக்கும் கடந்துசெல்கிறான்… Mar 445.2

தேவனுடைய பிரமாணத்தைத் தள்ளிப்போடுதல் அல்லது அலட்சியஞ்செய்தல் ஆகியவற்றினின்று எழும்புகின்ற, பரிசுத்தத்தைக்குறித்த தவறான கருத்துக்கள் இந்நாட்களில் ஏற்படுகின்ற மார்க்க சம்பந்தமான இயக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. இந்தக் கருத்துக்கள் கொள்கைகளில் பொய்யானதாகவும், செயல்முறைசார்ந்த விளைவுகளில் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. இத்தகைய கொள்கைகளுக்குப் பொதுவாக அதிக ஆதரவு கிடைக்கின்றது; இதனால், இந்தக் குறிப்பிட்ட காரியத்தில் வேதவாக்கியங்கள் என்ன கற்றுக்கொடுக்கின்றன என்பதுபற்றி அனைவரும் தெளிவான விளக்கதைப் பெற்றிருப்பது இரண்டு மடங்கு அவசியமாகும். Mar 445.3

உண்மையான பரிசுத்தமாகுதல் என்பது வேதாகம மூலக்கோட்பாடுகளில் ஒன்றாகும். அப்போஸ்தலனாகிய பவுலார் தெசலோனிக்கேயசபைக்கு எழுதிய நிரூபத்திலே: “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாக இருக்கிறது”; மேலும், “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக” என்றும் அவர் மற்றவர்களுக்காக ஜெபிக்கிறார் -1 தெசலோனிக்கேயர் 4:3,5,23. பரிசுத்தமாகுதல் என்றால் என்ன என்பதுபற்றியும், அதை எப்படி அடைவது என்பதைப்பற்றியும் தெளிவாக வேதாகமம் போதிக்கிறது. மீட்பர் தனது சீடர்களுக்காக “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்” என்று ஜெபித்தார். விசுவாசிகள், “பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட வேண்டுமென்று” பவுலார் போதிக்கின்றார் - ரோமர் 15:15. பரிசுத்த ஆவியானவரின் வேலை யாது? இயேசு தமது சீடர்களிடத்தில், “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான்16:13) என்று கூறினார். “உம்முடைய பிரமாணமே சத்தியம்” என்று சங்கீதக்காரர் கூறுகின்றார். அவருடைய பிரமாணத்தில் உள்ளடங்கியிருக்கும் நீதியின் மாபெரும் கொள்கைகள் தேவனுடைய வார்த்தையினாலும், அவருடைய ஆவியினாலும் மனிதருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. “தேவனுடைய பிரமாணம் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மை யாயும்” தெய்வீக பரிபூரணத்தின் ஒரு எழுத்துப்படிவமாகவும் இருக்கிறது. அந்த பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்ததால், அமைக்கப்பட்ட குணமானது பரிசுத்தமாக இருக்கும் என்று விளங்குகிறது. கிறிஸ்துவே அப்படிப்பட்ட குணத்திற்கு ஒரு முழுமையான முன்மாதிரியாக இருக்கிறார். “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டேன் என்றும், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்யவிரும்புகிறேன்” என்றும் கிறிஸ்து கூறுகிறார் (யோவான் 15:10;8:29). கிறிஸ்துவின் பின்னடியார்கள் அவரைப்போல ஆகவேண்டும். அவரது கிருபையினாலே அவரது பரிசுத்தப் பிரமாணங்களின் கொள்கைகளுக்கு இசைந்தபடி குணங்களை அமைக்க வேண்டும். இதுவே வேதாகமத்தின்படி பரிசுத்தமாகுதலாகும். இந்தப் பணி கிறிஸ்துவிலே விசுவாசம் வைப்பதின் மூலமாகவும், நம்மில் வாசஞ்செய்கின்ற தேவ ஆவியானவரின் வல்லமையின் மூலமாகவும் மாத்திரமே நிறைவேற்றப்படமுடியும்.⋆ Mar 445.4

வாக்குத்தத்த வசனம்: Mar 446.1

“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது…” - 1 தெசலோனிக்கேயர் 4:3. Mar 446.2