Go to full page →

போலித்தனமான பரிசுத்தம்!, ஆகஸ்டு 12 Mar 447

“அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.” - 1 யோவான் 2:4,5. Mar 447.1

மார்க்க சம்பந்தமான உலகில் பரிசுத்தமாகுதல் என்ற காரியம் என்பது இப்பொழுது முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. அத்துடன் சுயத்தை உயர்த்த்திக்காட்டுதல், தேவப் பிரமாணத்தைப் புறக்கணித்தல் என்ற ஒரு குணத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தவிதமான பரிசுத்தமாகுதல்-இந்தக் குறிப்பானது, வேதாகமமார்க்கத்திற்கு புறம்பானதாகும். இதை ஆதரித்துப் பேசுபவர்கள் பரிசுத்தமாகுதல் உடனடியாக நடைபெறும் பணி என்றும் போதிக்கிறார்கள்; அதைக்கொண்டு, விசுவாசத்தின் மூலமாக, பூரணமான பரிசுத்தத்தைக் பெற்றுக்கொள்ளலாம் என்றும் போதிக்கிறார்கள், மேலும், “விசுவாசித்தால் மாத்திரம் போதும்; ஆசீர்வாதம் உங்களுடையதாகும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பெற்றுக்கொள்பவர் பங்கிற்கு அவர் எந்த முயற்சியும் செய்யவேண்டியதில்லை என்று எண்ணிக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயத்தில், தேவப் பிரமாணத்தின் அதிகாரத்தை அவர்கள் மறுக்கிறார்கள். அத்துடன் தேவப் பிரமாணத்தைக் கைக்கொள்வது என்ற கடமையினின்று தாங்கள் விடுதலை பெற்றிருக்கிறதாகவும் வற்புறுத்திக் கூறுகிறார்கள்; ஆனால், அவரது சித்தத்திற்கும் தன்மைக்கும் வெளிப்பாடாக இருக்கிற கொள்கையான பிரமாணத்தோடு இசைந்துவராமல், அவரது சித்தத்தோடும் குணத்தோடும் ஒன்றுப்பட்டு இருக்கிறதற்கு ஏற்றவாறு மனிதர் பரிசுத்தமாக இருப்பது சாத்தியமான செயலா?. Mar 447.2

விடாமுயற்சி இன்றியும், சுயமறுப்பு இன்றியும் உலகத்தின் அனைத்து தீமைகள் ஆகியவற்றினின்றும் விலகியிருக்க அவசியமில்லாத-ஒரு இலகுவான மார்க்கத்தின்மீது மக்களுக்கு விருப்பம் இருக்கிறது. இத்தகைய விருப்பமானது, ‘விசுவாசம், விசுவாசம் மாத்திரமே’ என்ற கொள்கையை பிரபலமாக்கியிருக்கிறது. ஆனால், தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது? “என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால்… அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும். வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?” —யாக்கோபு 2:14,17,20. Mar 447.3

தேவனுடைய வார்த்தையின் சாட்சியானது, கிரியைகளற்ற விசுவாசம் எனப்படும் கொள்கையாகிய அந்தக் கண்ணிக்கு (பொறிக்கு) விரோதமாக இருக்கிறது. எந்த நிபந்தனைகளின் பேரில் இரக்கம் வழங்கப்படுகிறதோ, அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமல், பரலோகத்தின் ஆதரவை உரிமைகோருகின்ற விசுவாசமல்ல அது; அது துணிகரமேயாகும். வேதவாக்கியங்கள் வழங்கியிருக்கும் முன்னேற்பாடுகள், வாக்குத்தத்தங்கள் ஆகியவைகளில் மெய்யான விசுவாசத்தின் அடித்தளம் அமைந்திருக்கிறது. Mar 448.1

தேவனுடைய எதிர்பார்ப்புகளில் ஒன்றைத் துணிவோடு வேண்டுமென்றே மீறிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து கொண்டு, தாங்கள் பரிசுத்தமாக இருக்கமுடியும் என்று நம்பிக்கை வைத்து, எவரும் தங்களை ஏமாற்றிக்கொள்ளாதிருக்கட்டும். ஒரு தெரிந்த பாவத்தைச் செய்யும் காரியமானது, ஆவியானவரின் சாட்சியின் குரலை அமைதிப்படுத்தி, தேவனிடமிருந்து ஆத்துமாவைப் பிரித்துவிடுகிறது. “அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்” -1 யோவான் 2:4,5.⋆ Mar 448.2

வாக்குத்தத்த வசனம்: Mar 448.3

“என் மகனே, என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.” - நீதிமொழிகள் 7:1-2. Mar 448.4