Go to full page →

முத்திரையிடும் நேரம் சீக்கிரமாக முடிவடைகிறது!, ஆகஸ்டு 22 Mar 467

“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.” - யோவான் 9:4. Mar 467.1

முத்திரை போடப்படும் காலம் மிகவும் குறுகிய காலமாகும். அது சீக்கிரம் முடிவடைந்துவிடும்; இப்பொழுது, நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்துக்கொண்டிருக்கும்போது, நமது அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுவதற்குமான அந்த வேளை-இப்பொழுதுதான். Mar 467.2

மூன்றாம் தூதனின் தூது கொடுக்கப்பட்டு, முடிவடைந்து கொண்டிருந்த நேரம் எனக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. தேவனுடைய வல்லமையானது அவருடைய மக்கள்மீது தங்கியிருந்தது. அவர்கள் தங்களது ஊழியத்தை நிறைவேற்றி முடித்துவிட்டார்கள். தங்களுக்கு முன்னாலிருக்கும் சோதனைகளின் வேளைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். Mar 467.3

அவர்கள் பின்மாரியை அதாவது தேவனுடைய சமூகத்தினின்று வரும் இளைப்பாறுதலைப் பெற்றுக்கொண்டார்கள்; ஜீவனுள்ள சாட்சியானது மீண்டும் புத்துயிர் பெற்றது. கடைசி மாபெரும் எச்சரிப்பானது எங்கும் முழங்கப்பட்டுவிட்டது; அது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இந்தத் தூதை ஏற்றுக்கொள்ளவிரும்பாத பூமியின் குடிகளை அது மூர்க்கமடையச்செய்தது. Mar 467.4

தூதர்கள் பரலோகத்தில் அங்குமிங்குமாக விரைந்துகொண்டிருப்பதை நான் கண்டேன். கணக்கனின் மைக்கூட்டை இடுப்பிலே வைத்திருந்த தூதன், பூமியினின்று பரலோகத்திற்கு திரும்பிவந்து, தனது வேலை முடிந்துவிட்டது என்றும், பரிசுத்தவான்களின் தொகை எண்ணப்பட்டு முத்திரை போடப்பட்டாயிற்று என்றும் இயேசுவிடம் தனது அறிக்கையைக் கொடுத்தான்; பின்பு இயேசு தூபகலசத்தை எறிந்து போடுவதை நான் கண்டேன்; மேலும், தமது கரங்களை உயர்த்தி, உரத்தசத்தத்திலே: “முடிந்தது” என்று கூறினார். Mar 467.5

இக்கட்டுக்காலம் முழுவதும் பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலே ஒரு பிரதான ஆசாரியரின்றி, கர்த்தரின் பார்வையிலே தாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை அநேகர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் நான் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைத் தரித்துக் கொள்கிறவர்களும், இக்கட்டுக்காலத்திலே பாதுகாக்கப்படுகிறவர்களும், இயேசுவின் சாயலை முற்றிலுமாகப் பிரதிபலிக்க வேண்டும். Mar 468.1

மிகவும் தேவையான அந்த ஆயத்தத்தை அலட்சியப்ப்படுத்திக்கொண்டும், ஆனால், பின்மாரிக்காகவும் இளைப்பாறுதலின் நேரத்திற்காகவும், கர்த்தரின் நாளிலே நிற்பதற்கு தகுதியாக்கப்படுவதற்காகவும், அவருடைய பார்வைக்கடியில் வாழ்வதற்கும், அநேகர் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். ஆ! அந்த இக்கட்டுக்காலத்திலே, ஒரு மறைவிடமுமின்றி அநேகர் இருப்பதை நான் கண்டேன்! Mar 468.2

இயேசு ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டு வெளியேறுகிறபொழுது, பரிசுத்தவான்களாகவும் நீதிமான்களாகவும் இருப்பவர்கள் இன்னும் பரிசுத்தவான்களாகவும் நீதிமான்களாகவும் இருப்பார்கள்; ஏனெனில், அவர்களது பாவங்கள் அனைத்தும் அச்சமயம் அகற்றப்பட்டுவிடும்; மேலும் அவர்கள் ஜீவனுள்ள தேவனின் முத்திரையால் முத்திரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அநீதியாகவும் அசுத்தமாகவும் இருப்பவர்கள் தொடர்ந்து அநீதியாகவும் அசுத்தமாகவும் இருப்பார்கள்; ஏனெனில், பிதாவின் சிங்காசனத்திற்கு முன்பாக அவர்களது பலிகளையும் பாவ அறிக்கைகளையும் ஜெபங்களையும் செலுத்துவதற்கு அப்பொழுது ஆசாரியர் இருக்கப்போவதில்லை; எனவே, பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள மகா பரிசுத்தஸ்தலத்தைவிட்டு, இயேசு வெளியேறுவதற்கு முன்பாக, வரப்போகும் உக்கிரகோபமென்னும் புயலினின்று, ஆத்துமாக்களை தப்புவிக்கிறதற்காகச் செய்யப்படவேண்டிய அனைத்தும் செய்யப்பட வேண்டும்.⋆ Mar 468.3

வாக்குத்தத்த வசனம்: Mar 468.4

“துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.” - சங்கீதம் 32:10. Mar 468.5