Go to full page →

புதிய எருசலேமை தாக்குவதற்கு துன்மார்க்கர் ஆயத்தமாகிறார்கள்!, நவம்பர் 26 Mar 659

“சாத்தான்,... மோசம்போக்கும்படிக்கும், அவர்களையுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்.” - வெளிப்படுத்தல் 20:7,8. Mar 659.1

ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த சந்ததியாரும், நீண்ட காலம் வாழ்ந்திருந்தவர்களுமான அவர்களில் பெருந்திரளானோர் அந்தக் கூட்டத்தில் நிற்கிறார்கள். பிரம்மாண்டமான உருவமும், மிகுந்த அறிவும்கொண்டிருந்த அவர்கள், விழுந்துபோன தூதர்களின் கட்டுப்பாட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்களது திறமை, அறிவு ஆகியவை அனைத்தையும் தங்களை உயர்த்துவதற்காகவே முற்றிலும் பயன்படுத்தினார்கள். அவர்களுடைய கலைத்திறம் வாய்ந்த அவர்களது கொடுமையினாலும், தீய கண்டுபிடிப்புகளாலும், உலகத்தைத் தீட்டுப்படுத்தி, தேவனுடைய சாயலை பூமியிலிருந்து துடைத்து அழித்துப்போட்டார்கள். எனவே, தேவன் அவர்களை தமது படைப்பினின்று அகற்றி அழித்துப்போட்டார். இராஜ்யங்களை ஜெயித்த மன்னர்களும், தளபதிகளும், யுத்தங்களில் தோல்வியையே ஒருபோதும் சந்தித்திராத பெருமையான-பேராசையுள்ள-இராஜ்யங்களை நடுங்கவைத்த-வீரதீரமானவர்களும் இருந்தார்கள். மரணத்தினாலே அவர்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கல்லறைகளிலிருந்து வெளியே வரும்பொழுது, மரித்தபோது கொண்டிருந்த, தங்களை விழத்தள்ளியவர்களை வெற்றிகொள்ள வேண்டுமென்று அதே விருப்பத்துடனே செயல்பட்டார்கள். Mar 659.2

சாத்தான் தன்னுடைய தூதர்களோடு ஆலோசனைசெய்கிறான். பின்பு, இந்த இராஜாக்கள், வெற்றியாளர்கள் மற்றும் மாபெரும் மனிதர்களோடும் ஆலோசிக்கிறான். அவர்களெல்லாரும் தங்கள் பக்கம் நிற்கிற ஜனக்கூட்டத்தின் பலத்தையும் எண்ணிக்கையையும் பார்க்கிறார்கள். பட்டணத்திற்குள் இருக்கிற சேனையை தங்களுடைய சேனையோடு ஒப்பிடும்போது, சிறியதாக இருந்ததால், அதை எளிதில் முறியடித்துவிடலாம் என உறுதிபடக் கூறினார்கள். புதிய எருசலேமின் மகிமையையும் ஐசுவரியங்களையும் எடுத்துக்கொள்ளத் திட்டந்தீட்டுகிறார்கள். அனைவரும் உடனே யுத்தத்திற்கு ஆயத்தமாகிறார்கள். திறமையான தொழிலாளிகள், யுத்த ஆயுதங்களை ஆயத்தஞ்செய்கிறார்கள். வெற்றிக்குப் பெயர் போன இராணுவ அதிகாரிகள், யுத்த வீரர் குழுக்களை சிறு பிரிவுகளாகவும் பெரும் பிரிவுகளாகவும் அணிவகுக்கச்செய்கிறார்கள். Mar 659.3

இறுதியாக, முன்னேறிச்செல்வதற்கான கட்டளைகொடுக்கப்படுகிறது. எண்ணக்கூடாத திரள்கூட்டம்-பூமியிலே இதற்குமுன் ஒருபொழுதும் திரண்டிராத கூட்டம்-யுகம் நெடுகிலும் வாழ்ந்த வெற்றியாளர்களால் நடத்திச்செல்லப்படும் போர்ப்படை முன்னேறுகிறது. போர் வீரர்களிளெல்லாம் மாபெரும் வல்லமைவாய்ந்த சாத்தான் அவர்களை நடத்திச்செல்லுகிறான். அவனுடைய தூதர்கள் இந்தக் கடைசி யுத்தத்திற்கு தங்களது அணிகளை இணைத்துச்செல்கிறார்கள். அவனுடைய படையிலே, இராஜாக்களும் யுத்தவீரரும் இருந்தனர். திரளான கூட்டத்தார் மாபெரும் குழுக்களிலே, தங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அடியிலே அணிவகுத்துச் செல்கிறார்கள். இராணுவ அதிகாரிகளுக்குக்கீழ், ஒவ்வொரு கூட்டமும், தேவனுடைய நகரத்தை நோக்கிச் சென்றது. இயேசுவின் கட்டளைகளுக்கிணங்கி, புதிய எருசலேமின் கதவுகள் பூட்டப்படுகின்றன. சாத்தானுடைய சேனைகள் அந்த நகரத்தைச் சுற்றி வளைத்து, யுத்தத்திற்கு ஆயத்தமாகிறார்கள்!⋆ Mar 660.1

க்குத்தத்த வசனம்: Mar 660.2

“அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.” - சங்கீதம் 112:8. Mar 660.3