Go to full page →

புதிய வானமும் புதிய பூமியும்!, டிசம்பர் 9 Mar 685

“இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்ததின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” - 2 பேதுரு 3:11-13. Mar 685.1

துன்மார்க்கரின் பாதங்கள் புதிதாக்கப்பட்ட பூமியை ஒரு போதும் தீட்டப்படுத்துவதுமில்லை. பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து அக்கினி புறப்பட்டுவந்து, வேரும் கொப்புமில்லாமல், அவர்களைச் சுட்டெரித்துப்போடும். சாத்தான்-வேராகவும், அவனைப் பின்பற்றியவர்கள்-கொப்புகளாகவும் இருக்கிறார்கள். Mar 685.2

துன்மார்க்கரைப் பட்சித்துப்போட்ட அதே அக்கினி, பூமி அனைத்தையும் சுத்திகரித்தது. உடைந்த, கரடுமுரடான, ஒழுங்கற்ற மலைத்தொடர்கள் அதிக வெப்பத்தால் உருகிப்போயிற்று. வளிமண்டலமும், முள்ளும் குருக்குமாகிய அனைத்தும் எரிந்துபோயிற்று. பின்னர் நம் சுதந்தரவீதம் அழகோடும் மகிமையோடும் நமக்குமுன் காணப்பட்டது. புதிதாக்கப்பட்ட பூமியனைத்தையும் நாம் சுதந்தரித்துக்கொண்டோம். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின” - வெளி. 21:1. பாவிகளைப் பட்சிக்கிற அதே அக்கினி பூமியையும் சுத்திகரிக்கிறது. சாபத்தின் அனைத்துச் சுவடுகளும் துடைக்கப்பட்டுவிடுகின்றன. பாவத்தின் பயங்கல விளைவுகளை உணர்ந்த மீட்கப்பட்டவர்கள்முன், நித்தியமாக எரியும் நரகம் வைக்கப்படுவதில்லை. Mar 685.3

கடல், நண்பர்களைப் பிரிக்கிறது. நமக்கும் நாம் நேசிப்பவர்களுக்குமிடையே ஒரு தடையாக அது இருக்கிறது. அகன்ற மிக ஆழமான சமுத்திரங்களால் நம் தொடர்புகள் சிதைந்துபோகின்றன. புதிய பூமியில் கடல் காணப்பட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளால் இயக்கப்படுகின்ற துடுப்பகளுடன் கூடிய படகு அங்கு கடந்துசெல்வதில்லை, கடந்த காலத்தில், தேவனை நேசித்து, அவருக்கு ஊழியஞ்செய்த அநேகர், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பெரிய கப்பல்களில் துடுப்பு போடுவதற்காக, கொடூரமான முறையுல், கடின இதயமுள்ள மனிதர்களால் மனிதர்களால் கட்டப்பட்டு, நிர்பந்திக்கப்பட்டனர். தேவன் அவர்கள் வேதனையையும் பாடுகளையும் பரிவோடும் இரக்கத்தோடும் நோக்கிப்பார்த்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம்! புதிய பூமியில் கொடிய விசை நீரோடைகள் இல்லை; பெரிய சமுத்திரங்களில்லை; இடையறாது ஆர்ப்பரிக்கும் அலைகளும் இல்லை. Mar 685.4

இவ்வுலகில் தற்போது அழகானவைகளாகத் தோன்றும் ஒவ்வொன்றும், புதிய பூமியாகிய நம் பரமவீட்டிலுள்ள பளிங்கு நதியையும், பசுமையான வயல்களையும், அசைந்தாடும் மரங்களையும், ஜீவ ஊற்றுகளையும், பிரகாசமான நகரத்தையும், வெள்ளை அங்கியணிந்த பாடகர்களையும் நமக்கு நினைப்பூட்டட்டும். அந்த புதிய பூமியின் அழகை எந்த ஊவியனாலும் வரைய முடியாது. எந்த மனித நாவாலும் வர்ணிக்க இயலாது. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” (1 கொரி. 2:9)⋆ Mar 686.1

வாக்குத்தத்த வசனம்: Mar 686.2

“கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” - ஏசாயா 35:10. Mar 686.3