Go to full page →

யுகம் நெடுகிலும்... நமது கல்வி!, டிசம்பர் 23 Mar 713

“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி உன்னதங்களிலேயே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.” -எபேசியர் 2:7 Mar 713.1

மீட்பின் அறிவியலானது மற்றெல்லா அறிவியல்களைக் காட்டிலும் மேலானது; தேவதூதர்களைப்பற்றிய பாடங்கள், வீழ்ந்துபோகாத உலகங்களில் வாழும் அறிவுஜீவிகளைப்பற்றிய பாடங்கள், நம் கர்த்தரும் மீட்பருமானவரை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், முடிவில்லா நம் தேவனின் மனதில் உருவெடுக்கும் நோக்கங்கள், நித்திய காலங்கள் நெடுகிலும் அமையில் வைக்கப்பட்டிருந்த திட்டங்கள், ஆகியவை மீட்கப்பட்டோர் யுகங்கள் நெடுகிலும் படிக்கப்போகும் பாடங்களாகும். மனிதன் தொடரப்போகும் கல்விகளில் இது தலைசிறந்தது. வேறு எந்தக் கல்வியையும்விட, இதுவே ஆத்துமாவை உயர்த்தி, சிந்தையை ஊக்குவிக்கும், Mar 713.2

மீட்பின் பொருளை தேவதூதர்களும் அறிந்துகொள்ள வாஞ்சையாக உள்ளனர். முடிவில்லாத-நித்தியகாலமாக-மீட்கப்பட்டோர் பாடும் பாடல்களும், படிக்கும் பாடங்களும் மீட்ப்பைப்பற்றியதே; அப்படியென்றால், இப்பொழுதே அதைப்பற்றி நாம் கருத்தில் கொண்டு படிக்கவேண்டாமா? Mar 713.3

கிறிஸ்துவின் மானிட அவதாரம், அவர் நமக்காகச்செய்த பாவ நிவாரண பலி, மத்தியஸ்த ஊழியம் ஆகியவைகள், ஆராய்ந்து படிப்பவர்களுக்கு காலங்கள் இருக்கும் வரையிலும் மனதை ஈடுபடுத்திக்கொள்ளத் தகுந்த பொருளாக இருக்கும், அவன் பரலோகத்தையும் அதின் எண்ணிறந்த ஆணுகளையும் ஏறிட்டுப்பார்த்து, “தேவத்துவத்தின் இரகசியம் மகா பெரியது” என்று ஆச்சரியமடைவான். Mar 713.4

நாம் பூலோகத்தில் பெற்றிருக்கக்கூடிய சில வெளிப்பாடுகளை, பெற்றிருந்திருப்போமானால், நம் அறிவுக் கண்கள் திறந்திருக்கக்கூடும் என்ற காரியத்தை நித்தியத்தில் நாம் அறிந்து கொள்ளலாம். முடிவில்லாத யுகங்கள் நெடுகிலும், மீட்பைக்குறித்த ஆய்வுப்பொருளானது, மீட்கப்பட்டோரின் இதயங்களிலும் சிந்தைகளிலும் நாவுகளிலும் நிறைந்து விளங்கும். கிறிஸ்து தமது சீடர்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று ஏங்கிய, ஆனால் சீடர்கள் தங்கள் விசுவாசக்குறைபாட்டால் புரிந்துகொள்ளத் தவறிய, சத்தியங்களை மீட்கப்பட்டோர் அறிந்துகொள்வர். சதாகாலங்களிலும், கிறிஸ்துவின் பூரணமும், மகிமையும் புதிது புதிதாக வெளிப்படும், யுகங்கள் நெடுகிலும், நம் உண்மையுள்ள எஜமானர் தம் பொக்கிஷத்திலிருந்தும் புதிதும் பழையதுமான காரியங்களை வெளிக்கொண்டுவருவார், Mar 713.5

தேவனைப்பற்றியும், அவரது சத்தியத்தைப்பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் நமக்கு இருந்திருக்கக்கூடுமானால், சத்தியத்தை இன்னும் தோண்டி கண்டுபிடிக்கவோ, சிறந்த அறிவைப் பெற்றுக்கொள்ளவோ, இன்னும் மேலான வளர்ச்சியை அடையவோ வேண்டிய அவசியம் நமக்கிருக்காது; ஆனால், தேவனுக்கு ஸ்தோத்திரம்! அப்படியல்ல. தேவன் முடிவில்லாதவராயிருத்தல்போன்று, அவருக்குள் எல்லா ஞானமான பொக்கிஷங்களும் முடிவில்லாமல் இருக்கிறது; எனவே, நாமும் நித்திய காலமும் ஆராய்ந்துபார்க்கிறவர்களாகவும், எப்போதும் கற்றுகொள்கிறவர்களாகௌம் இருப்போம். அவரது ஞானம், நன்மை, வல்லமை, ஆகியவற்றின் ஐஸ்வர்யம் ஒருபோதும் குறைந்துபோவதில்லை.⋆ Mar 714.1

வாக்குத்தத்த வசனம்: Mar 714.2

“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” -1 கொரிந்தியர் 13:12. Mar 714.3