Go to full page →

ஒவ்வொரு உலகத்தையும் சென்று பார்ப்போம்!, டிசம்பர் 26 Mar 719

“...கர்த்தர் சொல்லுகிறதாவது: என் கரங்கள் வானங்களை விரித்தன...; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.” - ஏசாயா 45:11,12. Mar 719.1

இந்த உலகமும், பரலோக வாசஸ்தலங்களும் மட்டுமே தேவனால் படைக்கப்பட்ட அண்டசராசரம் என்ற கருத்தை அனேகர் கொண்டிருப்பதாகத் தெரிகிறது; அது அப்படியல்ல. Mar 719.2

தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்படிந்து நடக்கும் அநேக உலகங்கள் தேவனுக்கு உண்டு. சிருஷ்டிகரின் மகிமைக்கு ஏற்றதாக அந்த உலகங்கள் இயக்கப்படுகின்றன. அந்த உலகத்தின் குடிமக்கள் மனிதனின் மீட்புக்காகச் செலுத்தப்பட்ட மாபெரும் கிரயத்தைப்பார்த்து வியப்பினால் நிறைந்திருக்கிறார்கள். Mar 719.3

மற்ற உலகங்களைப்பற்றிய ஒரு காட்சியை கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிறார். எனக்குச் செட்டைகள் கொடுக்கப்பட்டன; நகரத்திலிருந்து ஒரு தூதன் என்னை மகிமையும் பிரகாசமுமான ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றான். பச்சைப்பசேலென்று புல்வெளிகள் இருந்தன. பறவைகள் இனிமையான கீதத்தை இசைத்துக்கொண்டிருந்தன. பல்வேறு அளவுகளில், அந்த இடத்திலுள்ள குடிமக்கள் இருந்தனர். அவர்கள் மேன்மையாகவும், கெம்பீரமாகவும், இனிமையாகவும் காணப்பட்டனர். இயேசுவின் சாயலை அப்பட்டமாகத் தரித்திருந்தனர். பரிசுத்த மகிழ்ச்சியோடு முகங்கள் பிரகாசிக்க, விடுதலை உணர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அவ்விடத்தில் காணப்பட்டனர். Mar 719.4

“பூமியில் இருப்பவர்களைவிட, எப்படி அவர்கள் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று அவர்களில் ஒருவனிடத்தில் நான் கேட்டேன். அதற்கு அவன்: நாங்கள் தேவனுடைய கற்பனைக்கு சரியாகக் கீழ்ப்படிந்து வாழ்ந்திருக்கிறோம். பூமியில் இருப்பவர்களைப்போன்று நாங்கள் கீழ்ப்படியாமல் விழுந்துவிடவில்லை” என்று பதிலளித்தான். பிறகு நான் இரு மரங்களைக்கண்டேன். அதில் ஒன்று நகரத்திலுள்ள ஜீவவிருட்சம் போன்றிருந்தது. இரண்டு விருட்சங்களின் கனிகளும் அழகாக இருந்தன; ஆனால், ஒன்றை அவர்களால் புசிக்கமுடியாது. இரண்டையும் புசிக்க அவர்களுக்கு வல்லமை உண்டு; ஆனால், ஒன்றைப்புசிக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடன் வந்த தூதன் என்னிடம்: “இவ்விடத்தில் ஒருவரும் அந்த விலக்கப்பட்ட மரத்தின் கனியை ருசிபார்க்கவில்லை. அவர்கள் புசித்தால் வீழ்ச்சியடைவார்கள்” என்றான். Mar 719.5

ஏழு சந்திரங்கள் கொண்ட ஒரு உலகிற்கு நான் அழைத்துசெல்லப்பட்டேன். அங்கே, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கைக் கண்டேன். பூமியிலிருந்து இவ்விடத்திற்குத் தான் தாங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டீர்களா என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர்: “இல்லை; பட்டணம்தான் (புதிய எருசலேமில்) என் வீடு. இவ்விடத்தைப் பார்க்க வந்தேன்” என்று கூறினார். ஏதோ சொந்த வீட்டில் இருப்பதைப்போன்று அங்கே அவர் நடந்து திரிந்தார். Mar 720.1

நான் அங்கேயே தங்கிவிடுகிறேன் என்று என்னுடன் வந்த தூதனிடம் கெஞ்சினேன். இந்த இருண்ட உலகிற்குத் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை; ஆனால் தூதனோ: “நீ திரும்பிச் செல்லவேண்டும்; நீ உண்மையாக இருப்பாயென்றால், 1,44,000 மக்களோடு, நீயும் சேர்ந்து, தேவனுடைய கரங்களில் கிரியைகளைப் பார்க்கத்தக்கதாக, அனைத்து உலகங்களுக்கும் செல்லும் சிறப்புமிகு உரிமையை பெறுவாய்” என்று கூறினார்.⋆ Mar 720.2

வாக்குத்தத்த வசனம்: Mar 720.3

“நம்முடைய சொந்தகுமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” - ரோமர் 8:32. Mar 720.4