Go to full page →

சாத்தானுடைய பிரதிநிதிகளைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!, பிப்ரவரி 20 Mar 101

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே... சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.” - 1 தீமோத்தேயு 4:1 Mar 101.1

1844-ம் ஆண்டின் காலம் கடந்துபோனபின்பு, நாம் பலவிதமான கொள்கைவெறிகளைச் சந்தித்தோம்... முற்க்காலத்தின் அனுபவங்களே மீண்டும் அரங்கேறும். வருங்காலங்களில் சாத்தானுடைய மூட நம்பிக்கைகளில் பல, புதிய உருவங்களைப் பெற்றுக்கொள்ளும். தவறுகள்-இனிமையானதாகவும், பொய்-கவர்ச்சியுடையதாகவும் நம்முன் வைக்கப்படும். கூடுமானால், தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க, சாத்தான் முயலுவான். மிகவும் வசியப்படுத்தக்கூடிய ஆதிக்க சக்திகள் ஈடுபடுத்தப்படுகின்றன; நம் மனது வசீகரிக்கப்படுகின்றது. Mar 101.2

நோவாவின் காலத்து மக்கள் மத்தியில் காணப்பட்ட எல்லாவித அருவருப்பான ஒழுக்கக் கேடுகளும், நம் மனதை கவர்ந்திழுக்கத்தக்கதாகக் கொண்டுவரப்படும். இயற்கையை தேவனுக்கு நிகராக உயர்த்துதல், மனிதனின் சித்தத்திற்கு தடையில்லாமல் அனுமதி, தேவனற்றவர்களின் செல்வக்கிற்கடியில் ஆலோசனை ஆகியவைகளைச் சாத்தான் தனது பிரதிநிதிகளாகக்கொண்டு, குறிப்பிட்ட சில நோக்கங்களை நிறைவேற்றப்பயன்படுத்துகிறான். அவன் தனது திட்டங்களைச் செயல்படுத்த, “மனதின்மீது (மற்றவர்களது) மனதிற்க்குள் சக்த்தியை” பயன்படுத்துகிறான். இவையனைத்திலும் மிகவும் வருத்தத்திற்குரிய சிந்தனை என்னவெனில், சாத்தானுடைய வஞ்சகமான மனிதர்கள் தேவனுடன் உண்மையாக எந்தத் தொடர்புமில்லாமல் இருக்கும்போதும், ஒரு போலியான தேவபக்தியின் வேஷத்தைப் பெற்றிருப்பர். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசித்த ஆதாம் ஏவாளைப்போன்று, இன்னும் பலர், வஞ்சகத்தின் தவறான உணவைப் புசித்துக் கொண்டிருக்கின்றனர். Mar 101.3

ஏதேன் தோட்டத்தில் நம் ஆதிப் பெற்றோரிடம் சாத்தான் தன் உருவத்தை மறைத்து, சர்ப்பத்தின்மூலமாகப் பேசியவண்ணம், இன்றும் சாத்தானின் பிரதிநிதிகள் தவறான கொள்கைகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஆடை உடுத்துவிக்கின்றனர். இப்பிரதிநிதிகள் உண்மையில் மனிதனின் மனதில் சாவிற்கேதுவான தவறுகளைப் புகட்டுகின்றனர். தேவனுடைய எளிமையும், தெளிவுமான வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, இனிமையாகத்தோன்றும் கட்டுக்கதைகளுக்கு திரும்புவோர் மீது சாத்தானின் வசியம் நிறைந்த செல்வாக்கு தங்கும். Mar 102.1

சாத்தான் அதிக வெளிச்சம் பெற்றவர்களையே கண்ணியில் சிக்கவைக்க, அதிகமாக ஈடுபாடுகாட்டுகிறான். அவன் அவர்களை வஞ்சிக்கமுடிந்தால், அவர்கள் அவன் கட்டுப்பாட்டிலிருந்து, பாவத்திற்கு நீதியின் உடையைத் தரிப்பித்து, பலரையும் தவறான பாதையில் வழி நடத்துவார்கள் என்று அறிந்திருக்கிறான். Mar 102.2

விழிப்பாயிருங்கள்; ஏனெனில், ஒளியின் தூதனைப்போல, கிறிஸ்தவ ஊழியர்களின் ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு சபையிலும் உலாவிவந்து, தன் பக்கத்திற்க்கு உறுப்பினர்களைச்சேர்க்க முயன்றுவருகிறான் என்று அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன். “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்” (கலத்தியர் 6:7) என்ற எச்சரிப்பை நான் தேவ மக்களுக்கு கூறுவதற்க்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.⋆ Mar 102.3

வாக்குத்தத்த வசனம்: Mar 102.4

“தங்கள் ஆபத்திலே கர்த்தரைநோக்கி கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்ச்சித்தார்.” - சங்கீதம் 107:13. Mar 102.5