Go to full page →

மாறுவேடத்திலுருக்கும் சோதனைகள்!, பிப்ரவரி 21 Mar 103

“நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களுலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்” - அப்போஸ்தலர் 20:29,30. Mar 103.1

தேவன் தமது சத்தியத்தை வெளிப்படுத்தத்தக்கதாக, இங்கொருவரும் அங்கொருவருமாக சிலரை மட்டும் தகுதியுள்ளவர்களாக தெரிந்தெடுத்துவிட்டு, கடந்து சென்றுவிடவில்லை. அவர் ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட சத்தியத்திற்க்கு முரண்பாடாக புதிய வெளிச்சத்தை ஒரு மனிதனுக்கும் கொடுக்கிறதில்லை. ஒவ்வொரு சீர்திருத்தத்தின்போதும் மனிதர் அப்படிப்பட்ட கொள்கையை முன்வைத்தே எழும்பியிருக்கிறார்கள்... Mar 103.2

சத்தியத்திற்கு மாறாகத் தோன்றாத, சில புதிய அடிப்படையான கருத்துகளை சிலர் ஏற்றுக்கொள்கின்றனர். அழகானதும் முக்கியமானதுமாக ஆடை அணிவிக்கப்பட்டிருப்பதாக ஒருவனுக்குத் தோன்றும் வரை, அந்த நபர் அதில் கருத்தூன்றியிருக்கிறான்; ஏனெனில், இத்தகைய மாயத்தோற்றத்தைக்கொடுக்க சாத்தான் வல்லவனாக இருக்கிறான். இறுதியில் அது அனைத்தையும் கவருகின்ற தலைமைக்கருத்தாகவும், அனைத்திற்கும் மையமாக விளங்கும் மிகப்பெரிய காரியமாகவும் உருவாகிவிடும். சத்தியம் இதயத்திலிருந்து பிடுங்கப்பட்டுவிடுகிறது... Mar 103.3

சத்தியத்திலிருந்து மனதைத் திசைதிருப்பும் தன்மையுள்ள இக்காரியத்தைக்குறித்து விழிப்புடன் இருக்கும்படி நான் உங்களை எச்சரிக்கின்றேன். தவறுகள் ஒருபோதும் கேடு விளைவிக்காமல் இருக்காது. அது ஒருபோதும் பரிசுத்தப்படுத்தாது; ஆனால், எப்பொழுதும் குழப்பத்தையும் முரண்பாட்டையுமே கொண்டு வருகிறது... Mar 103.4

ஆயிரக்கணக்கான சோதனைகள் வேஷந்தரிக்கப்பட்டு, சத்தியத்தை உடையவர்களுக்கென்று ஆயத்தமாயிருக்கிறது; எனவே, அனுபவ மிக்க சகோதரர்களுக்குமுன் வைக்காமல், எத்தகையதொரு புதிய உபதேசத்தையும் புதிய வேத விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பதே நம் அனைவருக்குமான ஒரே பாதுகாப்பாகும். தாழ்மையாகவும் — கற்றுக்கொள்ளும் ஆவியுடனும் — ஊக்கமான ஜெபத்துடனும் அவர்கள் முன்பாக அதை வையுங்கள். அவர்கள் அதில் எத்தகைய வெளிச்சத்தையும் காணாவிடில், அவர்களது தீர்வுக்கு அடிபணிந்துவிடுங்கள்... Mar 103.5

சாத்தான் தன்னுடைய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளான்; ஆனால், அவனது செயற்பாடுகளையும், தந்திரங்களையும் அறிந்திருப்பவர்கள் வெகு சிலரே. இந்த தந்திரமான எதிராளியின் முன்பு நிலைநிற்க தேவ மக்கள் ஆயத்தப்படவேண்டும். இந்த எதிர்ப்பிற்கே சாத்தான் அஞ்சுகிறான். அவனது சக்தியின் எல்லையையும், எதிர்த்து நின்று அவனை சந்தித்தால் எவ்வளவு எளிதாக நாம் அவனை வீழ்த்திவிடலாம் என்பதையும், அவன் நம்மை விட நன்றாக அறிந்திருக்கின்றான். மிகவும் பெலவீனமான பரிசுத்தவான் கூட, தேவ்வல்லமையைக்கொண்டிருக்கும்பொழுது, சாத்தானும் அவனது தூதர்களும் அவனுக்கு நிகரல்ல. அவன் சோதிக்கப்பட்டால் தான், உயர்ந்த வல்லமையைக் கொண்டிருப்பதை நிரூபிப்பான்; எனவே, சாத்தானுடைய நடவடிக்கைகள் சத்தமில்லாததாகவும், அவனது இயக்கங்கள் மறைவானதாகவும், அவனது உந்துசக்திகள் முகமூடி அணிந்ததாகவும் இருக்கும். அவன் வெளிப்படையாகத் தன்னைக் காட்டிக்கொள்வதில்லை; கிறிஸ்துவனின் தூங்கிக்கொண்டிருக்கும் வல்லமை உசுப்பிவிடப்பட்டு, அவன் தேவனோடு ஜெபத்தில் இணைந்துவிடாதபடி, சாத்தான் தன்னை வெளியரங்கமாக்க் காட்ட் முயற்சிக்கிறதில்லை.⋆ Mar 104.1

வாக்குத்தத்த வசனம்: Mar 104.2

“நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்” - நீதிமொழிகள் 3:24. Mar 104.3