Go to full page →

பரலோகத்தின் வாசல்களின் வழியாக...!, பிப்ரவரி 26 Mar 113

“விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்... தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துகொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.” - எபிரெயர் 11:5 Mar 113.1

நாம் மிகவும் தீமை நிறைந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்...அக்கிரமம் பெருகுவதால், அநேகருடைய அன்பு தணிந்துபோகின்றது. ஏனோக்கு தேவனுடன் முந்நூறு ஆண்டுகள் சஞ்சரித்தான். இப்பொழுதுள்ள காலத்தின் குறுகிய தன்மை, நாம் நீதியை அடைவதற்கு நம்மைத் துரிதப்படுத்துவதாகத் தோன்றுகிறது. நாம் சரியான செயல்களைச் செய்வதற்கு நம்மை கட்டாயப் படுத்தத்தக்கதாக, தேவனுடைய நாளின் பயங்கரங்கள் நம்முன்னால் வைக்கப்பட வேண்டியது அவசியந்தானா? ஏனோக்கின் காரியம் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றது . நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவன் தேவனோடு சஞ்சரித்தான். அவன் மிகவும் துன்மார்க்கமான காலத்தில் வாழ்ந்தான் அவனைச் சுற்றியிருந்த ஆவிக்குரிய காரியங்கள் அனைத்தும் மாசுபட்டிருந்தது; ஆயினும், அவன் தூய்மையை நேசிக்கவும், அன்பான காரியங்களில் ஈடுபடவும், தன் மனதைப் பழக்கப்படுத்திகொண்டான். அவனது உரையாடல் பரலோகத்தைக் குறித்தாகவே இருந்தது. இந்த மார்க்கத்தில் (வழியில்) ஓடத்தக்கதாக தன்னுடைய மனதிற்கு கற்பித்திருந்த்தோடு, தெய்வீகத்தின் சாயலை உடையவனாகவும் இருந்தான்... Mar 113.2

நம்மைப்போன்றே ஏனோக்கிற்கும் சோதனைகள் இருந்தன. நம்மைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தைக் காட்டிலும் அதிகமாக நீதியை நேசிக்கும் சமூகம் அவனைச் சூழ்ந்திருக்கவில்லை. நம்மைப் போன்றே அவனும் பாவத்தாலும் அக்கிரமத்தாலும் கறைபட்ட காற்றையே சுவாசித்தான்; ஆனாலும், அவன் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தான். அவன் வாழ்ந்த காலத்தில் நிலவிய பாவங் களினால் அவன் மாசுபடாதிருந்தான். அதுபோல, நாமும் தூய்மையாகவும் கெட்டுப்போகாமலும் இருக்கலாம். கடைசிக்காலத்தின் துன்மார்க்கத்திற்கும், ஆபத்திற்கும் மத்தியில் வாழும் பரிசுத்தவான்களின் ஓர் பிரதிநிதியாக அவன் இருக்கின்றான். தேவனை விசுவாசித்து கீழ்ப்படிந்ததால், அவன் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். அதுபோலவே, உயிரோடிருக்கும் விசுவாசிகளும் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். Mar 113.3

“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” பரலோகத்துடன் ஒத்திருக்கத்தக்கதாக, ஏனோக்கு முந்நூறு ஆண்டுகளாக சுத்தமுள்ள இருதயத்தை நாடித்தேடினான். மூன்று நூற்றண்டுகள் அவன் தேவனோடு சஞ்சரித்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் அவன் அவரோடு மேலும் நெருக்கமான ஐக்கியத்திற்காக ஏங்கி, மேலும் நெருக்கமாக உரையாடி, இறுதியில் அவரால் பரத்திற்ககு எடுத்துக்கொள்ளப்பட்டான். நித்திய உலகின் வாசலருகில் அவன் நின்றுகொண்டு இருந்தான். ஆசீர்வதிக்கப்பட்டோரின் தேசத்திற்க்கும் அவனுக்கும் இடையே ஒரேயொரு அடிதான் இருந்தது; இப்பொழுது, வாசற்கதவுகள் திறக்கப்பட்டன. பூமியில் நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டிருந்த “தேவனோடு சஞ்சரித்தல்” மேலும் தொடர்ந்தது. அவன் பரிசுத்த நகரத்தின் வாசல்களைக் கடந்து மனிதர்களில் முதலாமவனாக அங்கு பிரவேசித்தான்... Mar 114.1

இத்தகைய ஐக்கியத்திற்காக தேவன் நம்மை அழைக்கிறார். கர்த்தரின் இரண்டாம் வருகையின்போது, இரட்சிக்கப்படும் மனிதர்களது குணங்களின் பரிசுத்தத்தன்மை, ஏனோக்கினுடையதைப்போல் இருக்கவேண்டும். ⋆ Mar 114.2

வாக்குத்தத்த வசனம்: Mar 114.3

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” - சங்கீதம் 1:2 Mar 114.4