Go to full page →

அதிக உறுதியான தரிசனம்!, பிப்ரவரி 27 Mar 115

“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்க்கு காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” - ஆபகூக் 2:3. Mar 115.1

ஆபகூக்கையும், ஆழ்ந்த சோதனையின் காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களையும் நீதிமான்களையும் பெலப்பெடுத்திய அதே விசுவாசந்தான் இன்றைக்கும் தேவமக்களை தாங்கிக்கொண்டிருக்கிறது. இருண்ட மணிவேளைகளிலும், மிகவும் எதிரிடையான சூழ்நிலைகளிலும், கிறிஸ்தவ விசுவாசி தன் ஆத்துமாவை எல்லா வெளிச்சத்திற்கும் வல்லமைக்கும் உறைவிடமாகிய தேவனில் பாதுகாப்பாக வைக்கலாம். ஒவ்வொரு நாளும் அவன் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசத்தின்மூலம் அவனது நம்பிக்கையும், தைரியமும் புதுப்பிக்கப்படலாம்... தேவனுக்கு ஊழியஞ்செய்வதில் சோர்வோ, தடுமாற்றமோ, அச்சமோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கர்த்தரில் உறுதியாக நம்பிக்கை வைத்தோரின் உயர்ந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக அவர் நிறைவு செய்வார். அவர்களது பலதரப்பட்ட-தேவைகளுக்கேற்ற, ஞானத்தை அவர் அவர்களுக்கு கொடுப்பார். Mar 115.2

சோதிக்கப்படும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் திரளான காரியங்களைக்குறித்து பவுல் அப்போஸ்தலன் வல்லமையான சாட்சிபகருகிறார். “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்ற தெய்வீக வாக்குத்தத்தம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதற்கு நன்றியுடனும் நம்பிக்கையுடனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேவ ஊழியராகிய பவுலார்: “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால், கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படிகிறேன்.” என்று பதிலுரைக்கிறார். - கொரிந்தியர் 12:9,10. Mar 115.3

தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் சாட்சிபகர்ந்த அத்தகைய விசுவாசத்தை-தேவ வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டவர்களாக, அவர் நியமித்தகாலத்திலும் அவரது வழியிலும் விடுதலைக்காக காத்திருக்கும் விசுவாசத்தை நான் நம் மனதில் பேணி போற்றி வளர்க்க வேண்டும். இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவகவும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான வருகையின்பொழுது, நிச்சயமாக தீர்க்கதரிசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும். நாம் காத்திருக்கும் காலம் நீண்டதாகத் தோன்றலாம்; சோர்வடையச்செய்கிற சூழ்நிலைகளால் ஆத்துமாக்கள் நசுக்கப்படலாம்; ஆதியில் நம்பிக்கொண்டிருந்த பலர் வழியில் விழுந்துபோகலாம்; ஆனால், ஒப்பிட்டுப்பார்க்கமுடியாத அளவிற்க்கு மருளவிழுந்துபோன அந்தக்காலத்தில், யூதேயா நாட்டை உற்சாகப்படுத்த முயற்சித்த தீர்க்கதரிசியோடு சேர்ந்து: “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்குமுன்பாக மௌனமாயிருக்கக்கடவது” என்று நாமும் நம்பிக்கையோடு உறுதியாக அறிக்கையிடுவோம். Mar 116.1

“குறித்தகாலத்துக்கு தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை... தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்னும் உற்ச்சாகமூட்டும் தூதை நினைவுகூர்ந்து, அதை என்றும் பற்றிக்கொண்டிருப்போம்.⋆ Mar 116.2

வாக்குத்தத்த வசனம்: Mar 116.3

“நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம் பண்ணும்.” - ஏசாயா 43:20. Mar 116.4