Go to full page →

சீர்திருத்தவாதிகளின் விசுவாசம்!, ஜனவரி 6 Mar 11

“பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” - 1 கொரிந்தியர் 15:26. Mar 11.1

“வரப்போகும் 300 ஆண்டுகளுக்குள்ளாக நிச்சயமாக நாள் வந்துவிடும். இனியும் நீங்க காலத்திற்கு இந்த துன்மார்க்கமான உலகத்தை தேவன் அனுமதிக்கமாட்டார்: அனுமதிக்கமுடியாது” என்று மார்டின் லுத்தர் உறுதிபடக் கூறினார். “அருவருப்புகளின் இராஜ்யமாகிய இவ்வுலகம் வீழ்த்தப்படப்போகின்ற அந்த மகா நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது” என்று-டேனியல் டி.டெய்லர், பூமியின்மேல் கிறிஸ்துவின் ஆளுகை அல்லது அனைத்து யுகங்களிலும் சபையின் குரல் என்ற புத்தகத்தின் 33-ம் பக்கத்தில் கூறுகிறார். Mar 11.2

“வயதேறிப்போன இவ்வுலகம் முடிவடைதற்கான காலம் சமீபித்திருக்கிறது” என்றார் மேலாங்குதான். “எல்லாச் சம்பவங்களையும்விட, கிறிஸ்துவின் வருகையின் நாளே மிகவும் சிறப்பானதென்று ஆர்வத்தோடு விரும்புவதற்கு தயங்கவேண்டாம்” என கால்வின் கிறிஸ்தவர்களை வேண்டுகிறார். “மேலும் விசுவாசக் குடும்பங்கள் அனைத்துமே அந்த நாளை கருத்தில் கொண்டிருப்பார்கள்.” “நமது ஆண்டவர் தமது இராஜ்யத்தின் மகிமையை முற்றிலுமாக வெளிப்படச்செய்யப்போகிற அந்த மகா நாள் உதயமாகிறவரை கிறிஸ்துவை நாம் தேடவேண்டும்; அவரை தியானிக்க வேண்டும; அவருக்காகப் பசியோடிருக்கவேண்டும்” என்று டேனியேல் டி டெய்லர், “பூமியின்மேல் கிறிஸ்துவின் ஆளுகை அல்லது அனைத்து யுகங்களிலும் சபையின் குரல்” (பக்கம் 158, 134) என்ற நூலில் கூறுகிறார். Mar 11.3

“ஆண்டவராகிய இயேசு தமது மாம்சத்தோடு பரலோகத்திற்குச் செல்லவில்லையா?”, “அவர் திரும்பவும் வரமாட்டாரா?” “அவர் நிச்சயமாக வருவாரென்றும், விரைவில் வருவாரென்றும்” நமக்குத் தெரியும் என்றார், ஸ்காட்லாந்து நாட்டின் சீர்திருந்தவாதியான நாக்ஸ் என்பவர். சத்தியத்திற்காக உயிரைத்தியாகஞ் செய்த ரிட்லியும், லாட்டிமரும் ஆண்டவரின் வருகைக்காக விசுவாசத்தோடு நோக்கிப் பார்த்தார்கள். “சந்தேகத்திற்கு இடமின்றி இவ்வுலகம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அதை நான் நிச்சமயமாக நம்புகிறேன்; எனவே, அதை கூறுகின்றேன். வாரும், ஆண்டவராகிய இயேசுவே வாரும்” என்று தேவனுடைய ஊழியக்காரனாகிய யோவனுடன் சேர்ந்து, மீட்பர் கிறிஸ்துவை நோக்கி நமது இதயங்களில் முழக்கமிடுவோம் என்று ரிட்லி எழுதினார்-டேனியல் டி. டெய்லர், “பூமியின்மேல் கிறிஸ்துவின் ஆளுகை அல்லது அனைத்து யுகங்களிலும் சபையின் குரல்”, பக்கம் 145, 151. Mar 11.4

“ஆண்டவரது வருகையைப்பற்றிய நினைவுகள் எனக்கு மிகவும் இனிமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கிறது” என்று ரிச்சர்டு பேக்ஸ்டர் தான் எழுதிய “பணிகள்” (Works” என்ற நூலில் Vol. 17: 555-ல் கூறுகிறார். “அவரது வருகையை நேசிப்பதும், அந்த பாக்கியமான நம்பிக்கைக்காக எதிர்நோக்கியிருப்பதும் விசுவாசத்தின் கிரியையாகவும் அவரது பரிசுத்தவான்களின் குணமாகவும் இருக்கிறது உயிர்த்தெழுதலின் போது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக விசுவாசிகள் எவ்வளவு ஊக்கத்தோடு-ஏக்கம் நிறைந்தவர்களாக ஜெபிக்க வேண்டும்”- ரிச்சர்டு பேக்ஸ்டர், Vol. 17: 500. “அனைத்து விசுவாசிகளும் அவர்களது மீட்பிற்காகச் செய்யப்பட்டு அனைத்து ஊழியத்திற்கும், அவர்களது ஆத்துமாக்களின் அனைத்து விருப்பங்களுக்கும், பெருமுயற்சிகளுக்கும் ஒரு நிறைவேறுதல் என்றெண்ணியவர்களாக ஏக்கத்தோடும் நம்பிக்கையோடும் காத்துக்கொண்டிருக்கவேண்டிய அந்த நாள்-இதுவே” (இரண்டாம் வருகையின் நாளே). “ஆ! ஆண்டவரே, அந்த பாக்கியமான நாளை துரிதப்படுதுவீராக!”- ரிச்சர்டு பேக்ஸ்டர் Vol. 17: 182, 183 அப்போஸ்தல சபை, “வனாந்திரத்தில் இருந்த சபை”, சீர்திருத்தவாதிகளின் சபை ஆகியவைகளின் நம்பிக்கையும் இப்படிப்பட்டதாகயிருந்தது.⋆ Mar 12.1

வாக்குத்தத்த வசனம்: Mar 12.2

“கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்...” — ஏசாயா 36:15 Mar 12.3