Go to full page →

வரலாற்றை திறக்கும் திறவுகோல்!, ஜனவரி 7 Mar 13

“... ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க: அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள்” என்று சொல்லுகிறான். — ஏசாயா 21:11,12. Mar 13.1

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து, நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு நல்ல தெளிவான விளக்கமே, எதிர்காலத்தின் அனைத்துப் பாடங்களையும் விளக்குவதாகவும். அடுத்து வரப்போகும் வரலாற்றைத் திறக்கின்ற திறவு கோலாகவும் இருக்கிறது. Mar 13.2

வருகைக்காகக் காத்திருப்பவர்களின் அணி நெடுகிலும் இப்பொழுது உண்மையான காவல்காரனின் குறை கேட்க வேண்டியது அவசியமாகும். “விடியற்காலம் வருகிறது; இராக்காலமும் வருகிறது; ஆண்டவருக்கான ஆயத்தத்தின் அந்த மகா நாளிலே நாம் இருப்பதால், எக்காளமானது ஒரு குறிப்பிட்ட தொனியைக் கொடுக்க வேண்டும். Mar 13.3

தீர்க்கதரிசனத்தில், சத்தியங்கள் ஒன்றோடொன்று இணைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளை நாம் படிக்கும்பொழுது, அவைகள் அன்றாட செயல்முறைக்கு ஏற்ற கிறிஸ்துவ சத்தியத்தின் ஒரு அழகான தொகுதியாக அமைந்திருக்கிறது. நாம் கொடுக்கின்ற அனைத்துப் பிரசங்கங்களும், நாம் தேவகுமாரனின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம், ஜெபித்துக்கொண்டிருக்கிறோம், உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுவதற்காகவே. அவரது வருகையே நமது நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையானது, நமது அனைத்து வார்த்தைகளோடும், வேலைகளோடும், தோழமைகளோடும், உறவுகளோடும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறது... Mar 13.4

மனுஷகுமாரரின் இரண்டாம் வருகைபற்றிய அற்புதமான கருத்து மட்டுமே மக்களுக்கு முன்பாக வைக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்த பொருளைப்பற்றி இங்கு நாம் காணும் தலைப்பானது, நமது உரைகளிலே விட்டுவிடப்படக்கூடாது. நித்தியதைப்பற்றிய உண்மைகள் மனக்கண்முன்பாக வைக்கப்படவேண்டும். உலகின் கவர்ச்சிகள் அவைகள் இருக்கின்ற அந்த நிலையில்தானே, மாயையைப்போன்று முற்றிலும் பலனற்றதாக இருக்கின்றன. உலகத்தின் மாயத் தோற்றங்கள், அதன் புகழாரங்கள், அதின் ஐசுவரியங்கள், அதின் மேன்மைகள் அல்லது அதின் களியாட்டுகள் ஆகியவற்றுடன் நமக்கு என்ன வேலை இருக்கிறது? Mar 14.1

நமது மீட்பரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மகிமையான வருகைக்காக, அந்த பாக்கியமான நம்பிக்கைக்காகக் காத்துக்கொண்டும், நம்பிக்கொண்டு, ஜெபித்துக்கொண்டும் வாழ்கிற அந்நியர்களும் பரதேசிகளுமாக நாம் இருக்கிறோம். இதை நாம் விசுவாசித்து, நமது அன்றாட வாழ்கையின் செயல் முறைக்குக் கொண்டுவருவோமானால், இந்த விசுவாசமும் நம்பிக்கையும் எத்தகைய ஆற்றல் நிறைந்த செயல்களை நம்மிலே தூண்டி எழுப்பும்! ஒருவருக்கொருவர் எத்தகைய ஆர்வம் நிறைந்த அன்போடு பழகுவோம்! தேவனுடைய மகிமைக்காக, எத்தனை அக்கறையுடைய பரிசுத்தமான வாழ்வு வாழ்வோம்! வெகுமதிக்கான கைமாறாக, நாம் எவ்வளவு மதிப்பைக் காட்டுவோம்! நமக்கும் உலகிற்கும் இடையே பிரிக்கும் எல்லைக்கோடு எவ்வளவு தெளிவாகக் காணப்படும்!... Mar 14.2

ஒவ்வொரு உள்ளத்திலும் கிறிஸ்து மீண்டும் வருகிறார் என்கிற உண்மையானது வைக்கப்பட வேண்டும்.⋆ Mar 14.3

வாக்குத்தத்த வசனம்: Mar 14.4

“கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தொடும் வானத்திலிருந்து இறங்கி வருவர்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” - 1 தெசலோனிக்கேயர் 4:16,17. Mar 14.5