Go to full page →

வேதவாக்கியங்களே நமது பாதுகாப்பு! , மார்ச் 28 Mar 173

“இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” - எபிரெயர் 1:14. Mar 173.1

தேவனுடைய மக்கள் அவர்மீதுகொண்ட உறுதிப்பட்டை எவ்வளவு காலம்வரை பாதுகாத்துக்கொள்கிறார்களோ, எவ்வளவு காலம்வரை ஜீவனுள்ள விசுவாசத்தோடு இயேசுவைப்பற்றிப் பிடித்துக்கொள்கிறார்களோ, அவ்வளவு காலத்திற்கு அவர்கள் பரலோக தூதர்களின் பாதுகாப்பிற்கடியில் இருப்பார்கள். அவர்களுக்கு அழிவை உண்டுபண்ணத்தக்கதாக சாத்தான் நரக வித்தைகள் அனைத்தையும் அவர்கள்மீது செயல்படுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டான்; ஆனால், பாவத்தினாலே கிறிஸ்துவிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்பவர்களோ மாபெரும் ஆபத்தில் இருக்கிறார்கள்... Mar 173.2

இதற்கு முன்னால் இருந்த காலங்களைவிட, ஆத்துமாக்களுக்கான வாழ்க்கை என்னும் விளையாட்டில் சாத்தான் அதிகத் தீவிரமாக ஈடுபட்டு விளையாடிக்கொண்டிருக்கிறான். நாம் தொடர்ந்து நிலையான முறையில் எச்சரிக்கையாக இராவிட்டால், நமது இருதயங்களிலே பெருமை, சுயத்தின்மீது கொள்ளும் நேசம், உலகத்தின்மீதுகொள்ளும் ஆசை, மற்றும் பலவித தீயகுணங்களை நமது உள்ளத்தில் நிலைநாட்டிவிடுவான்; மேலும், ஒவ்வொரு சாதகமான உபாய தந்திரங்களையும் பயன்படுத்தி, தேவனிடத்திலும் அவரது வார்த்தையில் காணப்படும் சத்தியங்களிலும் கொண்டிருக்கும் விசுவாசத்தை நிலைகுலையச் செய்துவிடுவான். தேவனுடைய காரியங்களிலே ஆழ்ந்த அனுபவம் நமக்கு இராவிட்டால், அவரது வார்த்தையைப்பற்றிய முழுமையான அறிவு நமக்கு இராவிட்டால், எதிராளி கொண்டுவரும் பிழையான காரியத்தினாலும், போலியான வாதங்களினாலும் நாம் அழிந்துபோகத்தக்கதாக, ஏமாற்றபட்டு விடுவோம். பொய்யான கொள்கைகள் அநேகரது அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்துவிடும். ஏனெனில், அவர்கள் பிழையினின்று சத்தியத்தைத் தெளிவாகக் கண்டறிய கற்றுக்கொள்ளவில்லை. வேத வாக்கியங்களை தீவிர முயற்சியெடுத்துப் படிப்பதிலும், நமது விசுவாசத்திற்கான காரணம் பற்றி அறிவுப்பூர்வமாக நன்றாகப் புரிந்துகொண்டிருத்தலும், தெரிந்த ஒவ்வொரு கடமையையும் உண்மையும் உத்தமுமாகச் செய்வதிலுந்தான், சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு எதிரான ஒரே பாதுகாப்பு இருக்கிறது. தெரிந்த ஒரு பாவத்தில் உழன்றுகொண்டிருப்பது, பெலவீனத்தையும் இருளையும் ஏற்படுத்தி, நம்மைக் கொடிய சோதனைக்கு ஆளாக்கிவிடும்... Mar 173.3

இயேசுவிற்கு நமது இதயக் கதவைத் திறந்துகொடுத்து, சாத்தான் நுழையாதபடி ஒவ்வொரு வழியையும் அடைத்துக்கொண்டிருக்கிறோமா? நாம் கிறிஸ்துவின் நீதியிலே நிற்கத்தக்கதாக தெளிவான வெளிச்சத்தையும் மிகப் பெரும் வல்லமையும் ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொண்டிருக்கிறோமா? அனைத்து தன்னலங்களையும் எடுத்துப்போட்டு, இருதயங்களை வெறுமையாக்கி, பரலோகத்தினின்று பின்மாரியைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாகச் சுத்திகரித்து, ஆயத்தமாக்கிக்கொண்டிருக்கிறோமா?... Mar 174.1

வெற்றிகொள்வது என்பது ஒரு மாபெரும் பணியாகும். அந்த பணியை ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் எடுத்து நடத்துவோமா? அவ்வாறு செய்யாவிடில் நமது, “அழுக்கான உடைகள்” நம்மைவிட்டு அகற்றபடாது. அவைகள் நம்மிடமிருந்து வன்முறையிலே கிழித்து எடுக்கப்படுமென்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்கத் தேவையில்லை. அவைகள் நம்மைவிட்டு அகற்றப்படவேண்டும் என்ற ஒரு விருப்பத்தை நாம் முதலாவதாகக் காட்டவேண்டும். கிறிஸ்துவின் இரத்தத்தின் புண்ணியங்களிலே சார்ந்தவர்களாக, நம்மைவிட்டு பாவத்தை அகற்ற முயற்சி செய்ய வேண்டும்; பின்னர் அந்த இக்கட்டு வருகின்ற நாளிலே, சத்துரு நம்மை நெருக்கும்போது, நாம் தூதர்கள் மத்தியிலே நடப்போம். Mar 174.2

வாக்குத்தத்த வசனம்: Mar 174.3

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசிர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்.”- ஆதியாகமம் 12:2. Mar 174.4