Go to full page →

அத்தியாயம் 14 - சவுலின் மாறுதல் GCt 42

இயேசுவை பிரசங்கித்து வந்த புருஷர்களையும் ஸ்திரீகளையும் எருசலேமிற்கு கட்டி இழுத்து வருவதற்காக, சவுல், பிரதான ஆசாரியர்களிடம் நிருபங்களை கேட்டு வாங்கினான். அந்த அதிகார நிருபங்களை எடுத்துக் கொண்டு தமஸ்குவிற்கு புறப்பட்ட போது, சாத்தானின் தூதர்கள் அவனை சுற்றிலும் ஆர்ப்பரித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அவன் போகையில், சடிதியில் வானத்திலிருந்து ஒரு ஒளி அவனை சுற்றிப் பிரகாசித்தது. தீய தூதர்கள் சிதறிப்போனார்கள். சவுல் தரையிலே விழுந்தான். அப்பொழுது, ஒரு சத்தம் உண்டாகி, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” எனக் கேட்டது. அதற்கு சவுல், “நீர் யார், ஆண்டவரே?” என்றான். கர்த்தர் அவனிடம், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்கும் கடினம்” என்றார். சவுல் அதற்கு பிரதியுத்திரமாக, “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” என்று வினவினான். அதற்கு கர்த்தர், “நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ; நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்”, என்றார். GCt 42.1

சவுலுடன் பிரயாணம் பண்ணின மனிதர்கள் சத்தத்தை கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். அவ்வொளி மறைந்தபின், சவுல் தரையிலிருந்து எழுந்து, கண்களை திறந்தபோது ஒருவரையும் பார்க்கவில்லை. பரலோகின் ஒளி அவனை பார்வையிழுக்கச் செய்திருந்தது. அவனை கரம்பற்றி தமஸ்கு மட்டும் அழைத்து வந்தார்கள். அங்கே மூன்று நாட்கள் புசியாமலும், குடியாமலும், பார்வையற்றவனாய் இருந்தான். சவுல் சிறைப்பிடிக்கவேண்டிய ஒருவனிடம் தேவன் தரிசனமாகி, “அனனியாவே, நீ எழுந்து, நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டிலே தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு. அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான். அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான்”, என்றார். GCt 42.2

அன்னியா, பயந்தவனாக, சவுலைக் குறித்து தான் கேள்விப்பட்டதை கர்த்தரிடத்தில் பகிர ஆரம்பித்தான். ஆனால் கர்த்தர் அவனை நோக்கி, “நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துக்கொண்ட பாத்திர மாயிருக்கிறான்” என்றார். கர்த்தரின் கட்டளைகளுக்கு இணங்கி, அந்த வீட்டினுள் பிரவேசித்து, அன்னியா சவுலின் மேல் கை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும் படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும் படிக்கும் என்னை அனுப்பினார்” என்று கூறினான். GCt 42.3

சவுல் உடனே பார்வையடைந்து, எழுந்து, ஞானஸ்நானம் பெற்றான். தாமதமின்றி, இயேசு தான் மெய்யான தேவகுமாரனென்று ஆலயங்களிலே சவுல் பிரசங்கித்தான். அவனை கேட்டவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டு, “எருசலேமில் இந்த நாமத்தை தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா” என்று பேசினார்கள். சவுல் அதிக வலுவடைந்து, யூதர்களை திகைக்கச் செய்தான். அவர்கள் மீண்டும் குழப்பமடைந்தார்கள். பரிசுத்த ஆவியின் அனுபவத்தை எல்லாருக்கும் சவுல் அறிவித்தான். இயேசுவை எதிர்த்து, அவரை பின்பற்றியவர்களை சவுல் தண்டித்து வந்தது அனைவருக்குமே தெரிந்திருந்தது. அவனுடைய அற்புத மனமாறுதல் அநேகரை இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வைத்தது. தான் செய்து வந்த கொடூரமான செயல்களையும், தமஸ்குவிற்கு அவன் வந்த நோக்கத்தையும், வழியில் நிகழ்ந்த அற்புதத்தையும் சாட்சியாக சவுல் அறிவித்து வந்தான். சவுல் தைரியமாக இயேசுவைப் பற்றி பிரசங்கித்தான். அது அநேகருக்கு பெலனாக இருந்தது. வேதத்தின் அறிவை ஏற்கனவே பெற்றிருந்த சவுல், இப்பொழுது கிட்டிய தேவ ஒத்தாசையினால், தீர்க்கதரிசன வசனங்களை எவ்வித குழப்பமின்றி போதிக்க ஆரம்பித்தான். அவன் மீது தங்கியிருந்த பரிசுத்த ஆவியின் மூலமாக, இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் பற்றிய சத்தியங்களை விளக்கி, எவ்வாறு வேதப்புத்தகங்களில் உரைக்கப்பட்ருந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தான். GCt 42.4

பார்க்க : அப்போஸ்தவர் 9:1-43