Go to full page →

அத்தியாயம் 21 - திருச்சபையும் உலகமும் ஒருமுகமானது GCt 60

தாங்கள் அபகரித்திருந்த காரியங்களைக் குறித்து சாத்தானும் அவனுடைய தூதர்களும் கலந்தாலோசித்தார்கள். சிலரை பயத்தினால் நிறைத்து, சத்தியத்தை ஏற்காமல் இருக்கச் செய்தார்கள் என்பது GCt 60.1

உண்மைதான். ஆனால், அநேகர் பயத்தைத் துறந்து தைரியமடைந்து, சத்தியத்தை ஏற்றுக்கொண்டர்கள். தங்களுடைய முன்னோடிகளின் விசுவாசத்தையும் உறுதியையும் பார்த்த அவர்கள், தேவனும் அவருடைய தூதர்களும் இவர்களுக்கு பணிவிடைச் செய்தார்கள் என்பதை அறிந்துக்கொண்டார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஜீவனை கிறிஸ்துவுக்காக கொடுக்க தயக்கமில்லாமல் முன்வந்தது, கொலைகாரர்களையே மிரள வைத்தது. இவ்விதமாக சாட்சிகளை வசப்படுத்த இயலாத சாத்தான், வேறு யுக்தியை ஆயத்தப்படுத்தினான். அவன் ஏற்கனவே சபையின் கோட்பாடுகளை களங்கப்படுத்தியிருந்தான். சம்பிரதாயச் சடங்குகளை விரும்பிய லட்சக்கணக்கானோர் இந்த இழிவான கோட்பாடுகளில் வேரூன்ற ஆரம்பித்தார்கள். இதனை பயன்படுத்தி, விசுவாசம் அல்லாமல், உலகின் சம்பிரதாயங்களை ஊக்குவிக்கும்படி சபையை நடத்த வேண்டுமென சாத்தான் திட்டம் வகுத்தான். உலக மரியாதையையும், ஆதரவையும் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்த திருச்சபை, தேவனுடைய ஆதரவை இழக்க ஆரம்பித்தது. சுகபோகப்பிரியரையும், உலக சிநேகிதர்களையும் வெளியே நிறுத்திய கற்பனைகளை எப்பொழுது திருச்சபை தொலைத்துப்போட்டதோ, அப்பொழுதே சபையின் வல்லமையும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. GCt 60.2

நிந்தைகளின் நெருப்பு சுட்டெரித்த காலங்களில் காணப்பட்ட திருச்சபையின் விசுவாசிகள், இப்போது காணாமல் போயிருந்தார்கள். பொன்னின் மகிமை மங்கியது எப்படி? பசும்பொன்னின் மகிமை மாறியது எப்படி? திருச்சபைக்கே உரிய நற்பண்புகளையும் கற்பனைகளையும் கைக்கொண்டிருந்தால், பரிசுத்தஆவியின் வல்லமை சபைக்கு இருந்துக்கொண்டே இருந்திருக்கும். நோயாளிகள் சுகமடைந்திருப்பார்கள், பிசாசுகள் விரட்டியடிக்கப்பட்டிருக்கும், தனது எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திருச்சபை திகழ்ந்திருக்கும். GCt 60.3

கிறிஸ்துவின் நாமத்தை தரித்திருந்த திரளான கூட்டத்தை நான் கண்டேன். தம்முடையவர்கள் என்று தேவன் அவர்களை அடையாளம் காணாதிருந்தார். அவர்களால் அவருக்கு சந்தோஷம் இல்லாதிருந்தது. கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் குறித்து தாங்களே நினைத்துக்கொள்ள வேண்டுமென்று சாத்தான் ஆலோசனை கூறினான். இயேசுவையும், அவருடைய சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், அனைவரும் நம்ப வேண்டுமென சாத்தான் விரும்பினான். அவனும் அவனுடைய தூதர்களும் இவைகளை விசுவாசித்து, கலங்கினார்கள். ஆகிலும், இந்த விசுவாசம், ஒருவரை நல்ல கிரியைகளில் ஈடுபட தூண்டாவிட்டாலும்; அல்லது, இயேசுவில் காணப்பட்ட சுயநலமற்ற வாழ்க்கையை பிரதிபலிக்காவிட்டாலும், அஃது சாத்தானை சேதப்படுத்தவில்லை. ஏனெனில், கிறிஸ்துவின் நாமத்தை மாத்திரம் தரித்திருந்த அவர்களின் சிந்தை மாம்சமானதாக இருந்தது. கிறிஸ்தவன் என்கிற நாமத்தில் தங்களது குறைபாடுகளை மறைத்து வைத்தார்கள். இதனிமித்தமாக, தூய்மையும் களங்கமுமில்லாத சத்தியம் அவமானங்களுக்குட் படுத்தப்பட்டது. GCt 60.4

மாமிச சிந்தை கொண்டவர்களை திருப்திப் படுத்தும்படியாக பிரசங்கிமார் பிரசங்கித்தார்கள். இதனை சாத்தான் விரும்பினான். இயேசுவைப் பற்றியோ, சத்திய உண்மைகளைக் குறித்தோ யாரும் பிரசங்கிக்கவில்லை. ஏனெனில், உலகத்தார் அதனை ஏற்க மறுத்தார்கள். அநேகர் ஐசுவரியவான்களாக இருந்ததினால், சத்தியமே இல்லாதபோதிலும், சபையில் அங்கம் வகித்து வந்தார்கள். உலகத்தாரின் கண்களில் பேரும் புகழும் பெறும்படியாக, கிறிஸ்துவின் சத்தியம் பரைசாற்றப்பட்டது. இத்தகைய மதக்கோட்பாடுகளை பின்பற்றுகிறவர்கள் உலக அரங்கில், தனிச் சிறப்பையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இத்தகைய போதனைகள், கிறிஸ்துவின் போதனைகளுக்கு மாறுபாடானவைகள். கிறிஸ்துவை உண்மையாக பின்பற்ற விரும்புகிறவர்கள், உலகத்தை விட்டு- வர மனமுடையவர்களாக இருப்பது அவசியம். இப்பொழுதோ, வேஷம் தரித்தவர்களும், பாவிகளும், சபையோடு இணைந்துக் கொண்டார்கள். கட்டுக்கதைகள் போதிக்கப்பட்டும் அங்கீகரிக் கப்பட்டும் வந்தன. இந்தப்படியே, உலகத்தாருக்கும் பெயரளவு கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசங்கள் இல்லாமல்போனது. திருச்சபை விசுவாசிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டால், அவர்களிடம் காணப்படும் பாவங்களும், இழிவான குணங்களும், தீமைகளும், அவர்களை ‘பிசாசின் பிள்ளைகள்’ என்று வர்ணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லாதிருந்தது. இக்காட்சியை, தேவனும் அவருடைய தூதர்களும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருச்சபைக்கான விசேஷித்த செய்தி ஒன்றை தேவன் ஏற்படுத்தினார். இச்செய்தி ஏற்கப்படுமானால், திருச்சபையின் அவலட்சணங்கள் வேரறுக்கப் பட்டு, தேவனின் பார்வையில் அத்திருச்சபை மீண்டும் பிரியமானதாக இருக்கும். GCt 60.5

பார்க்க : ஏசாயா 30 : 8 -21
யாக்கோபு 2 : 19
வெளிப்படுத்தல் 3 : 1-22