Go to full page →

அத்தியாயம் 3 - மீட்பின் திட்டம் GCt 4

மனிதன், தன் பூரணத்தை இழந்தான்; தேவன் மிகவும், நேர்த்தியாக படைத்திருந்த உலகம் இனி துன்பங்களினாலும், நோய்களினாலும், மரணங்களினாலும் நிறையப்போகிறது; குற்றம் புரிந்தவர்கள் தப்பியோட வழி ஏதும் இல்லை; இவைகளை தெளிவாக உணர்ந்த பரலோகமே ஸ்தம்பித்து, துக்கத்தினால் நிறைந்திருந்தது. ஆதாமின் குடும்பம் மரித்தாக வேண்டும். நேர்த்தியான இயேசுவின் முகக்குறியில், நிழலாடிய துக்கத்தையும், அனுதாபத்தையும் நான் கண்டேன். பிதாவை மறைத்திருந்த மிகப் பிரகாசமான ஒளியை நோக்கி இயேசு நகர்ந்ததையும் கண்டேன். இயேசு பிதாவோடுசம்பாஷித்த நேரம் முழுவதும், தூதர்கள் மன விசாரத்தோடு இருப்பதை கண்டேன். இயேசு தமது பிதாவோடு நெருங்கிய சம்பாஷனையில் இருப்பதாக என் தூதன் என்னிடம் கூறினான். பிதாவை சூழ்ந்திருந்த மகிமையின் ஒளியில் மூன்று முறை இயேசு மறைக்கப்பட்டார். மூன்றாவது முறையாக அவர் அந்த ஒளியிலிருந்து வெளிப்பட்ட போது, அவரை காண முடிந்தது. இப்பொழுது, அவரது முகக்குறி அமைதியாக, எவ்வித குழப்பமும், கிலேசமும் இல்லாமல் இருந்தது. வார்த்தைகளினால் விவரிக்கமுடியாதபடி அவரது முகம் தயையும், அழகும் நிறைந்திருந்தது. வீழ்ந்துபோன மனிதனை மீட்கும்படி ஒரு வழி உண்டாக்கப் பட்டிருப்பதை பெருந்திரளான தூதர்களுக்கு அவரே அறிவித்தார். தனது பிதாவிடம் தான் மன்றாடியதையும், தனது ஜீவனையே மீட்கும் கிரயமாக கொடுக்க முன் வந்ததையும் எடுத்து கூறினார். அஃதோடு, சாவின் பாரத்தை தானே தாங்கப்போவதாகவும், அவர்மூலமாக மனிதன் மன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெளிவுபடுத்தினார். அந்தப்படியே, தனது இரத்தத்தின் புண்ணியத்தினாலும், தேவ கட்டளைக்கு கீழ்ப்படிகிறதினாலும், தேவனின் அன்பிற்கு மீண்டும் பாத்திரவான்களாக வழி உண்டு என்பதையும் விளக்கினார். இதனடிப்படையில், துரத்தப்பட்ட மனிதன், மீண்டும் அந்த அழகிய தோட்டத்தினுள் நுழையவும், ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கவும் வழியுண்டு என எடுத்துரைத்தார். தங்களது சேனாதிபதி உரைத்தமீட்பின் திட்டத்தை கேட்ட தூதர்களால் களிகூறமுடியவில்லை. பிதாவின் கோபத்திற்கும், மனிதனின் பாவத்திற்கும் இடையேதான் நின்று, சகல பாவத்தையும் தாங்கி, பலரின் இகழ்ச்சியையும் ஏற்று, இந்த மீட்பின் வழியை உண்டு பண்ணியதை, இயேசு விவரித்தார். வெகு சிலரே அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் பரம மகிமை அனைத்தையும் விட்டுவிட்டு, உலகில் மனிதனாக தோன்றி, தம்மை தாழ்த்தி, தமது சொந்த அனுபவங்களின் மூலமாக மனிதனை அலைக்கழிக்கும் சகல சோதனைகளையும் சகித்து, சோதனைகளை மேற்கொள்ளும் வழிமுறைகளை கற்றும் கொடுக்க சித்தம் கொண்டார். இறுதியாக, அவருடைய கற்பிக்கும் பணி முடியும். பொழுது, பிசாசின் விருப்பப்படியே கொடிய மனிதர்களின் மூலமாக தனக்கு வர இருக்கும் மகாகொடூரமான மரணத்தையும், சகல அவமானங்களையும், சகிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தார். தேவ தூதர்கள் கூட காண இயலாத அளவுக்கு கொடூரமான மரணத்தைப் பற்றி கூறினார். தான் ஒரு குற்றம் தீர்க்கப்பட்ட பாவியாக வானத்துக்கும் பூமிக்கும் இடையே பல மணி நேரங்கள் மரண வேதனையோடு தொங்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். சரீர வேதனைகளோடு ஒப்பிட முடியாத மன அவஸ்தையையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வுலக பாவத்தின் பாரம் முழுமையாக அவர் மீது சுமத்தப்படும். அவர்களிடம், அவர் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பரத்திற்கு ஏறி, தன் பிதாவிடம் வழதப்பிச் சென்ற மனிதர்களுக்காக பரிந்து பேசப் போவதைப் பற்றியும் சொன்னார். GCt 4.3

தூதர்கள் அவரை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார்கள். தங்கள் ஜீவனை கொடுக்க அவர்கள் முன்வந்தார்கள். இயேசுவோ, தாமே மரிக்கவேண்டியதின் அவசியத்தையும், அவர்களுடைய ஜீவன் இப்பெரிய கடனை தீர்ப்பதற்கு போதுமானதல்ல என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். அவருடைய ஜீவன் மாத்திரமே பரமபிதா ஏற்றுக்கொள்ளும் பிரதிக்கிரயம் என்றும் கூறினார். GCt 5.1

தேவதூதர்களின் பங்காக, தனக்கு பல்வேறு சமயங்களில் அவர்கள் உடன் இருந்து உற்சாகப் படுத்துவது மிக அவசியம் என்பதை அவர்களிடம் இயேசு சொன்னார். மனிதனின் விழுந்து போன நிலையை தான் எடுத்துக்கொள்ள போவதால், அவர் சந்திக்க இருக்கும் அவமானங்களையும் மாபெரும் வேதனைகளையும் அவர்கள் கவனிக்க வேண்டும் என தெளிவுபடுத்தினார். இத்தருனங்களில், அவர் படும் வேதனைகள், பிற மனிதரின் வெறுப்புகள் போன்றவற்றை அவர்கள் கவனிக்கும்போது, எக்காரணத்தைக் கொண்டும், அவர்கள் உணர்ச்சிமிகுந்து, அவர்கள் கான்கின்ற எதையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள கூடாது என்றும் கட்டளை பிறப்பித்தார். மரித்து, உயிர்தெழும்போது அவருக்கு அவர்கள் பணிவிடை செய்யவேண்டும் என்றும் கூறினார். இத்தகைய மீட்பின் திட்டம் வரையப்பட்டு, பிதாவும் அதனை ஏற்றுக்கொண்டார் என தெரிவித்தார். GCt 5.2

பரிசுத்த துக்கத்துடன், இயேசு தூதர்களை தேற்றினார். இதற்கு பின், தான் இரட்சிக்க வேண்டியவர்கள் தன்னுடன் நித்தியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை தெரியப்படுத்தினார். தனது மரணத்தின் மூலம் அநேகரை அவர்மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும், மரணத்தின் வல்லமையை பெற்றிருந்த சாத்தானை அழித்துவிடவேண்டும் என்றும் அவர் வாஞ்சித்தார். இத்தியாகத்திற்கு பின், பரமபிதா தன்வசம் இந்த இராஜ்ஜியத்தையே ஒப்படைத்து விடுவார் என்றும், இராஜ்ஜியத்தை மத்திரமல்லாமல் அஃதோடு அந்த அதிகாரத்தை இவரே நித்தியம் நித்தியமாக வைத்துக்கொள்வார் என்றும் அறிவித்தார். சாத்தானும், அவனைச்சார்ந்த பாவிகளும் ஒருபோதும் பரலோகத்தின் பரிசுத்தத்தை குலைத்துவிடாமல் இருப்பதற்காக, அவர்களை முழுவதுமாய் அழிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இவ்விதமாக, தமது தியாக பலியின் வாயிலாக, தேவத் தொடர்பை இழந்திருந்த பாவ மனிதன் மீன்டும் ஒப்புரவாகி, பாவ மன்னிப்பை பெற்று, நித்தியமாக பரலோக தேவனோடு வாழும் பாக்கியத்தை பெற இருக்கிறான் என்பதை உணர்ந்து பரமசேனைகள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும் என உத்தரவிட்டார். GCt 5.3

பின்பாக, அறிவிக்கமுடியாத மகிழ்ச்சி பரலோகத்தை நிறைத்தது, பரமசேனை துதி கீதங்களைப் பாடி பரமதேவனை போற்றினார்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கின்னரங்களை மீண்டும் இயக்கி, முன்பு பாடியதை காட்டிலும் அதிக உற்சாகத்துடன் தேவனுடைய பெருந்தன்மையை போற்றி பாடினார்கள். தனது சுய சந்தோஷத்தை மறுத்து, கலகக்காரருக்காக தம்மையே தியாக பலியாக ஒப்புக்கொடுக்க முன் வந்த தேவ குமாரனை வெகுவாக பாராட்டி பாடினார்கள். பிதாவின் புயத்தை விட்டு அகன்று, வேதனைகள் நிறைந்த வாழ்வை தெரிந்துக்கொண்டு, அவமானமான சாவையும் வரவேற்ற இயேசுவை மிகுதியாக துதித்தார்கள். GCt 6.1

எனது தூதன் என்னிடம், “போராட்டம் ஏதுமில்லாமல், பரம பிதா, தனது ஒரேபேரான குமாரனை தந்தருளினாரா?” என்று கேட்டான். இல்லவே இல்லை. குற்றம் புரிந்த மனிதனை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கவா, அல்லது அவர்களுக்காக மரிப்பதற்கென தமது ஒரே குமாரனை கொடுப்பதா, என்ற விவாதத்தில் தான் பரம பிதாவும் இருந்தார். இத்தகைய தியாகத்தை செய்வதற்கு அநேக தூதர்கள் ஆவலோடு முன் வந்தார்கள். ஆனால், மனிதனின் பாவத்தை சுமந்து தீர்க்கக் கூடிய வல்லமை குமாரனின் மரணத்திற்கு மாத்திரமே உண்டு என்பதால் வேறு எந்த தியாகமும் பலனற்றது என என் தூதன் விளக்கினான். GCt 6.2

தேவ தூதர்களுக்கோ ஒரு சிறப்பு பணி ஒதுக்கப் பட்டிருந்தது. அவர்கள், பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையே மேலும் கீழும் சென்று, குமாரனுக்கு உற்சாக பணிவிடை செய்யவேண்டியிருந்தது. இஃதோடு, பிசாசின் வல்லமையை எதிர்த்து வாழ்கின்ற யாவருக்கும் கிருபையின் பாதுகாப்பை நல்குவதும் தூதர்களின் பணியே!! அழிந்து போகிற மனிதனை மீட்கும் பொருட்டாக, பிதா, எவ்விதத்திலும் நியாயத்தீர்ப்பின் சட்டங்களை மாற்ற இயலாத நிலை இருந்தது. எனவே, மனிதனின் மீறுதல்களுக்கு மரிப்பதற்hகாக தமது ஒரே குமாரனை தந்தருளினார். GCt 6.3

மானிடனை வீழ்த்தியதின் விளைவாக, தேவகுமாரனை பரலோக கெம்பீரத்திலிருந்து இறக்கிவிட்ட மகிழ்ச்சியில் சாத்தான் தனது தூதர்களுடன் களிகூர்ந்தான். இயேசு மனித அவதாரம் எடுத்த பின், அவரை எளிதாக மேற்கொண்டு, மீட்பின் திட்டத்தையே தடை செய்ய தன்னால் கூடும் என தனது தூதர்களிடம் கூறினான். GCt 6.4

முன்பு இருந்த மேன்மை மிக தூதனாகவும், இப்பொழுது இருக்கின்ற வீழ்ந்த தூதனாகவும், சாத்தான், எனக்கு காட்டப்பட்டான். இன்னமும் இராஜ தோற்றத்தை கொண்டிருந்தான். உயர்ந்த முகச்சாயலை பெற்றிருந்தான். வீழ்ந்து போன ஒரு தூதனாயிற்றே! ஆனால், அவன் முகத்தோற்றம், மன விசாரம் நிறைந்ததாயும், பாரமுள்ளதாயும், வன்மம் நிறைந்ததாயும், வெறுப்பு, பொய் அடங்கியதாயும் காட்சியளித்தது. ஒரு காலத்தில் உயர்ந்த புருவங்களையும் அகன்ற நெற்றியையும் பெற்றிருந்த அவன் இப்பொழுது பின்னோக்கி இழுக்கப்பட்டிருந்த சாயலை பெற்றிருந்தான். அவன் தன்னையே இழிவு படுத்திக் கொண்டிருந்த படியால், தன்னில் உண்டாயிருந்த சகல உயரிய குணங்கள் அனைத்தும் மங்கி, சகல தீமையின் குணங்கள் வளர்ந்திருந்தன. அவனுடைய கண்கள் தந்திரமுள்ளதாயும், கபடம் நிறைந்ததாயும், உருவ குத்துகிறதாயும் இருந்தன. அவனுடைய வடிவம். பெரிதாக இருந்தது ஆனால் அவனது மாமிசம் கைகளிலும் முகத்திலும் கொடூரமாக தொங்கிக்கொண்டிருந்தது. நான் அவனை பார்த்தபோது அவனது நாடி தனது இடது கையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அச்சமயத்தில், அவன் முகத்தில் ஒரு கொடூரமான வஞ்ச புன்னகை தோன்றி என்னை நடுங்க வைத்தது. தனது பாவ இலக்குக்கு ஒருவன் இரையாகும் முன் இந்த சிரிப்பை சாத்தான் உடுத்திக்கொள்வான். அந்த இரை அவனது பிடியில் அகப்பட்டுக்கொள்ளும்போது இந்த புன்னகை கொடூரமாக மாறும். GCt 7.1

பார்க்க :- ஏசாயா 53