Go to full page →

அத்தியாயம் 39 - தனித்த பூமி GCt 107

நான் பின்பு பூமியை பார்த்தேன். துன்மார்க்கர் மரித்து, அவர்களுடைய சடலங்கள் பூமியின் மீது கிடந்தன. கடைசி ஏழு வாதைகளின் மூலமாக தேவனின் கோபத்திற்கு அவர்கள் ஆளாகியிருந்தார்கள். அவர்கள் வலியில் துடித்து, தேவனை சபித்திருந்தார்கள். கள்ளப் போதகர்கள் யேகோவாவின் கோபத்தின் குறிகளாக இருந்தார்கள். தேவனின் சத்தத்தினால் நீதிமான்கள் விடுவிக்கப்பட்டபின், துன்மார்க்கரின் உக்கிரம் அவர்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திற்று. பூமியே இரத்தத்தினால் நனைந்து இருந்தது, உலகத்தின் ஒரு முனைமுதல் மறு முனை மட்டும் சடலங்கள் சிதறிக்கிடந்தன. GCt 107.1

இப்பூமி, தனித்து, பாழான நிலையில் இருந்தது. பூமியதிர்ச்சியினால் நகரங்கள் தரைமட்டமாகி இருந்தன. மலைகள் தங்கள் இடங்களை விட்டகன்றிருந்தன. கடல் கொந்தளித்து பூமியின் மீது கற்களை சிதறியிருந்தது. பூமியே ஒரு பாழான வனாந்திரம் போல் காட்சியளித்தது. பெரிய மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு, சிதறி கிடந்தன. ஆயிரம் வருடங்களுக்கு இதுவே சாத்தானின் இருப்பிடம். தேவ கற்பனைகளை எதிர்த்து நின்றதன் விளைவுகளை, சாத்தான், இப்பொழுது காண்பான். அவன் ஏற்படுத்திய வீழ்ச்சியின் விளைவுகளை இந்த ஆயிரம் வருடங்கள் அனுபவித்தாக வேண்டும். பூமியிலே கட்டப்படவிருக்கும் சாத்தான், வேறு யாரையும் வீழ்த்த இயலாமல், தவிப்பான். அவனுடைய விழ்ச்சியின் நாள் முதல், அவனுடைய தீய குணாதிசயங்கள் கிரியை செய்து கொண்டே இருந்தன. அவனுடைய சகல வல்லமையும் பறிக்கப்பட்டு, தான் இழைத்திருந்த பாவத்தின் சம்பளமாகிய அழிவை இறுதியில் பெற்றுக் கொள்ளும்படியாக அவன் காத்திருப்பான். GCt 107.2

பிசாசினால் சோதிக்கப்படமுடியாததை எண்ணி தூதர்கள் ஆரவாரித்தார்கள். அஃது பத்தாயிரம் இசைக் கருவிகளினால் வாசிக்கப்பட்ட பிரம்மாண்டமான இசையைப் போல் ஒலித்தது. GCt 107.3

இயேசுவும், மீட்கப்பட்ட பரிசுத்தவான்களும் சிங்காசனங்களில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். தேவனுக்கு ஆசாரியர்களாக பரிசுத்தவான்கள் பணியாற்றுவதையும், மரித்த துன்மார்க்கரை அவர்கள் நியாயந்தீர்ப்பதையும் நான் கண்டேன். கற்பனை புஸ்தகமாகிய தேவ வசனத்தை ஒப்பிட்டு நியாயம் விசாரித்தார்கள். துன்மார்க்கருடைய கிரியைகளுக்கு தக்கதாக நியாயம் விசாரிக்கப்பட்டது. முடிவிலே, மரண புஸ்தகத்தில் அவர்களின் நாமங்கள் எழுதப்பட்டன. சாத்தானும் அவனுடைய தூதர்களும் இவ்வன்னமே நியாயந்தீர்க்கப்பட்டார்கள். தான் வஞ்சித்திருந்தவர்களின் தண்டனையைப் பார்க்கிலும் சாத்தானின் தண்டனை மிக பயங்காரமானதாக இருக்கும். அவன் வஞ்சித்திருந்த யாவரும் மடிந்த பின், சாத்தான், இன்னமும் உயிருடன் இருந்து அநேக நாட்கள் பாடனுபவிக்க வேண்டியிருந்தது. GCt 107.4

துன்மார்க்கரின் நியாய விசாரனை முடிந்த பின்பு, ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் இயேசு பரம நகரத்தை விட்டு வெளியேறினார். தேவதூதர்களும் அவரை பின்பற்றினார்கள். பரிசுத்தவான்களும் பின்தொடர்ந்தார்கள். இயேசு ஒரு மகாபெரிய கன்மலையின் மீது இறங்கினார். அவர் பாதம் பட்டவுடனே அந்த மலை தரைமட்டமாயிற்று. அப்பொழுது ஒரு மகாபெரிய, அழகிய பட்டணத்தை கண்டேன். இந்த நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரங்களிருந்தன. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வாசல்களாக மொத்தம் பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு வாசலிலும் ஒரு தூதன் நிறுத்திவைக்கப்பட்டான். இந்தப் பட்டணம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, இயேசு ஆயத்தப்படுத்தி வைத்திருந்த சமபூமியில் நிலைநிறுத்தப்பட்டது. GCt 107.5

பார்க்க : சகரியா 14 : 4 -12
வெளிப்படுத்தல் 20 : 2-6; 20:12, 21: 10-27