Go to full page →

கிருபையின் கால முடிவிற்கு முன்னதாக ஞாயிறு ஆசரிப்புச் சட்டம் அமலாக்கப்படும் கச 165

கிருபையின் கால முடிவிற்கு முன்னதாக, மிருகத்திற்குச் சொரூபம் உண்டுபண்ணப்படும் என்பதைத் கர்த்தர் எனக்குத் தெளிவாகக் காண்பித்திருக்கின்றார். ஏனெனில், அதுவே தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர்களது நித்தியமான முடிவைத் தீர்மானிக்கக்கூடிய மாபெரும் பரீட்சையாக இருக்கின்றது. 1ஞாயிறு ஆசரிப்புச் சட்ட வலியுறுத்தல் தேவனுடைய பிள்ளைகளுக்கு மாபெரும் பரீட்சையாக இருக்கப்போகின்றது என்று காட்டப்பட்டுள்ள முந்தைய (15-ம்) அதிகாரத்தைப் பார்க்கவும். - 2SM 81 (1890). கச 165.3

“மிருகத்திற்கான சொரூபம்” என்றால் என்ன? அது எவ்வாறு உண்டுபண்னப்படவேண்டும்? அந்தச் சொரூபம் இரண்டு கொம்புள்ள மிருகத்தால் உருவாக்கப்படும். மேலும், அது மிருகத்துக்காக உருவாக்கப்படுகின்ற சொரூபமாகும். அது மிருகத்தின் சொரூபமாகவும் கூட அழைக்கப்படுகின்றது. 2வெளி. 13:11-17 வரையில் சொல்லப்பட்டுள்ள இரண்டு கொம்புள்ள மிருகம் வெளி. 13:1-10 வரையில் கொடுக்கப்பட்டுள்ள மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகின்றது. பன்னர் அந்தச் சொரூபம் எதற்கொத்ததாய் இருக்கின்றது என்பதையும், எவ்விதமாய் உருவாக்கப்படுகின்றது என்பதையும் அறிந்துகொள்ள, போப்பு மார்க்கமான அம்மிருகத்தினுடைய குணாதிசயங்களையே நாம் அறிந்துகொள்ளவேண்டும். கச 165.4

ஆரம்பகால சபை எப்போது சுவிசேஷத்தின் எளிமையை விட்டு விலகி, புறஜாதிகளுடைய பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் கறைபட்டதோ, அப்போதே அது தேவனுடைய ஆவியையும் வல்லமையையும் இழந்துபோனது. எனவே மக்களுடைய மனச்சாட்சியைக் கட்டுப்படுத்த அது மதச் சார்ப்பற்ற வல்லமையின் ஆதரவை நாடியது. அதன் விளைவாக வந்ததே நாட்டினுடைய அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய, தன் சொந்த முடிவுகளை செயல்படுத்துவதற்கு, விசேஷமாக, தங்கள் “மதத்திற்கு எதிரான கொள்கை” யை உடையவர்களைத் தண்டிப்பதற்கு தனது சொந்த முடிவுகளையே செயல்படுத்திய போப்பு மார்க்கம் என்ற ஒரு சபை. மிருகத்திற்கு ஒரு சொருபத்தை அமெரிக்கா உண்டுபண்ண வேண்டுமெனில், தனது நோக்கங்களை நிறைவேற்ற அரசின் அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கேதுவாக மத வல்லமை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தியாகவேண்டும். கச 166.1

மிருகத்தின் சொரூபம் என்பது, புராட்டஸ்டண்ட் சபைகள் தங்களது பிடிவாதமான கொள்கைகளை வலியுறுத்துவதற்காக, அரசாங்க வல்லமையின் உதவியை நாடும்போது உண்டாக்கப்படக்கூடிய மருளவிழுந்துபோன புராட்டஸ்டணட் மார்க்கத்தின் அமைப்பைக் குறிக்கின்றது. — GC 443, 445, (1911). கச 166.2