Go to full page →

முத்திரையிடுதல் முடியும்போது கிருபையின் காலம் முடிவடையும் கச 166

இக்கட்டுக்காலத்திற்குள் பிரவேசிப்பதற்கு சற்றுமுன்னதாக, நாம் அனைவரும் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைப் பெற்றிருப்போம். அதன் பின்பு, தங்கள் கையிலுள்ள நான்கு காற்றுகளை விட்டுவிட இருந்த நான்கு தூதர்களை நான் கண்டேன். அப்பொழுது பஞ்சங்களையும், கொள்ளைநோய்களையும், பட்டயங்களையும், ராஜ்யங்களுக்கு விரோதமாக ராஜ்யங்கள் எழும்பினதையும், முழு உலகமும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதையும் நான் கண்டேன். — 7BC 968 (1846). கச 166.3

பரலோகத்தில் தூதர்கள் அங்கும் இங்கும் விரைவாக சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். தனது கையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த ஒரு தூதன் பூமியிலிருந்து திரும்பி வந்து தன்னுடைய வேலை முடிந்துவிட்டதாகவும், பரிசுத்தவான்கள் எண்ணப்பட்டு முத்திரையிடப்பட்டுவிட்டதாகவும் இயேசுவிடம் தெரிவித்தான். அப்போது பத்துக் கற்பனைகளடங்கிய பெட்டிக்கு முன்பாக ஊழியம் செய்துகொண்டிருந்த இயேசு கிறிஸ்து, தமது கைகளிலிருந்து தூபகலசத்தைக் கீழே போட்டு, தமது கைகளை உயர்த்தி உரத்த சத்தத்துடன் “முடிந்தது” எனக் கூறியதை நான் கண்டேன். — EW 279 (1858). கச 166.4

ஒரு கணப்பொழுதைப்போன்ற நேரமே இன்னும் மீந்திருக்கின்றது. ஆனால் இராஜ்யத்துக்கு விரோதமாக இராஜ்யமும் ஜாதிக்கு விரோதமாக ஜாதியும், ஏற்கனவே எழும்பிக்கொண்டிருக்கின்றபடியால், இந்த நேரத்தில் ஈடுபட வேண்டிய பொதுவான வேலை ஒன்றுமில்லை. தேவனுடைய ஊழியக்காரர்களுடைய நெற்றிகளில் முத்திரை போடப்பட்டுத் தீருமளவும், நான்கு காற்றுகள் இன்னமும் பிடித்துவைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பின்பு, பூமியின் வல்லமைகளெல்லாம் தங்களது படைகளைக் கடைசி மாபெரும் யுத்தத்திற்கு அணிவகுக்கும். — 6T 14 (1900). கச 166.5

பூமியிலிருந்து திரும்பிவருகின்ற ஒரு தூதன், தனது வேலை முடிந்துவிட்டதாக அறிவிக்கின்றான். கடைசி சோதனை இவ்வுலகத்தின் மீது கொண்டுவரப்பட்டிருக்கின்றது. தெய்வீக நியமங்களுக்கு உண்மையாயிருந்ததை நிரூபித்த அனைவரும், “ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைப்” பெற்றிருந்தனர். அதன்பின்பு, பரலோக ஆசரிப்புக் கூடாரத்தில், இயேசுகிறிஸ்து தமது மத்தியஸ்த வேலையை நிறுத்து கின்றார். பின்னர் தமது கரங்களை உயர்த்தி ஒரு உரத்த சத்தத்துடன்: “முடிந்தது” என்று கூறுகின்றார். — GC 613 (1911). கச 167.1