Go to full page →

கிருபையின் காலம் சடுதியில் — எதிர்பாராத நேரத்தில் முடிவடையும் கச 167

இயேசுகிறிஸ்து மனிதனுக்காகப் பரிந்துபேசுவதை நிறுத்தும்போது, அனைவரது வழக்குகளும் நித்தியமாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கும்... கிருபையின் காலம் முடியும்; பரலோகத்தில் கிறிஸ்து பரிந்து பேசுவது முடிவுக்கு வரும். இந்த நேரம் கடைசியாக அனைவர்மீதும் சடுதியாக வருகின்றது. சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் ஆத்துமாக்களைச் சுத்திகரித்துக்கொள்ளத் தவறின அனைவவரும் தூங்கிக்கொண்டிருப்பவர்களாக காணப்படுவர். — 2T 191 (1868). கச 167.2

கிருபையின் காலம் முடியும்போது, சடுதியாக, எதிர்பாராதவிதமாக நாம் அதை மிகக்குறைவாக எதிர்பார்க்கின்ற ஒரு நேரத்தில் வரும். ஆனால் இன்றைக்கு, நாம் ஒரு சுத்தமான பதிவேட்டைப் பரலோகத்தில் பெற்றிருக்க முடியும். தேவன் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்கின்ற நிச்சயத்தையும் நாம் அறிந்துகொள்ள முடியும். — 7BC 989 (1906). கச 167.3

நுட்ப நியாய விசாரணையின் வேலை முடிவடையும்பொழுது, அனைவரது நித்தியமும் ஜீவனுக்காக அல்லது மரணத்திற்காக என்று தீர்மானிக்கப்பட்டிருக்கும். வானத்தின் மேகங்களின்மீது கர்த்தர் தோன்றுவதற்கு ஒரு குறுகின காலத்திற்கு முன்பாகவே கிருபையின் காலம் முடிவடைகின்றது... கச 167.4

ஜலப்பிரளயத்திற்கு முன்பு நோவா பேழைக்குள் பிரவேசித்த பிற்பாடு, நேவாவை உள்ளே வைத்தும், தேவபக்தி இல்லாதவர்களை வெளியே வைத்தும் தேவன் அடைத்தார். ஆனால், அடுத்த ஏழு நாட்களும், தங்களது அழிவு நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதை அறியாத மக்கள், அஜாக்கிரதையான களியாட்டத்தை விரும்புகின்ற தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்தது மட்டும்மின்றி, சடுதியாய் நடக்க இருக்கின்ற நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புகளை குறித்தும் பரிகசித்துக்கொண்டிருத்தார்கள். ஆகவேதான் நமது இரட்சகரும், “அப்படியே” “மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத். 24:39) என்று கூறுகின்றார். அமைதியான நடு இரவில், திருடனைப்போல. எவரும் அறியாவண்ணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கின்ற மணி வேளையானது கடந்துபோகும்; பாவிகளுக்கு அளிக்கப்பட்ட இரக்கத்தின் சலுகை முடிவாக எடுபட்டுப்போகும்... கச 167.5

வியாபாரம் செய்கின்றவர்கள் தங்களது லாபத்தைச் சம்பாதிப்பதிலேயே தொடர்ந்து மூழ்கியிருக்கும்போது, களியாட்டத்தை விரும்புகின்றவர்கள் அதை அனுபவிக்க நாடிக்கொண்டிருக்கும்போது, நாகரீகமோகம் கொண்ட பெண் அழகுப்பிரியராய் தன்னை வீனாய் அலங்கரித்துக்கொண்டிருக்கும்போது — ஒரு வேளை இப்படிப்பட்ட அந்த மணி வேளையிலே, சர்வ பூமியின் நியாயாதிபதி, “நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய்” (தானி. 5:27) என்கின்ற வாக்கியத்தின் தீர்ப்பைக் கூறுவார். - GC 490, 491 (1911). கச 167.6