Go to full page →

கிருபையின் காலம் முடிவடைந்துவிட்டதாக சாத்தான் யூகிப்பான் கச 170

சாத்தான் இக்கட்டுக்காலத்திலே துன்மார்ககரைத் தூண்டிவிடுவான். அவர்கள் தேவ மக்களை வளைந்துகொண்டு, அவர்களை அழிக்க முயல்வார்கள். ஆனால், மன்னிக்கப்பட்டாயிற்று என்ற வார்த்தை, பரலோகப் புத்தகங்களில் அவரது மக்களின் பெயர்களுக்கெதிராக எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவன் அறியாதிருப்பான். — RH Nov. 19, 1908. கச 170.2

யாக்கோபுக்கு எதிராக ஏசாவைப் புறப்படத் தூண்டுவதற்கு சாத்தான் எவ்வாறு தனது செல்வாக்கை பயன்படுத்தினானோ, அதேபோல இக்கட்டுக் காலத்திலே தேவனுடைய மக்களை அழிக்கும்படிக்கு துன்மார்க்கரைத் தூண்டுவிடுவான்... பரிசுத்த தூதர்கள் அவர்களுக்குப் பாதுகாவலர்களாக நிற்பதை அவன் காண்பான். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யூகிப்பான். ஆனால் பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலே, அவர்களது வழக்குகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதை அவன் அறியாதிருப்பான். — GC 618 (1911). கச 170.3