Go to full page →

முழு உலகமும் ஒரு பக்கத்திலோ அல்லது மறு பக்கத்திலோ சேர்க்கப்படும் கச 183

முழு உலகமும் சர்ச்சைக்குரிய கேள்வியின் ஒரு பக்கத்திலோ அல்லது அதன் மறுபக்கத்திலோ காணப்படும். அர்மகெதோன் யுத்தம் நடத்தப்படும். அந்த நாள் நம் ஒருவரையும் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடிக்காதபடிக்கு, தங்கள் விளக்கிலே எண்ணெயை வைத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகளைப்போல, நாம் நமது விளக்குகளில் எண்ணெயை வைத்துக்கொண்டு அதிக விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை நாம் கண்டிப்பாகப் பெற்றிருக்கவேண்டும். கர்த்தருடைய சேனையின் அதிபதியானவர், யுத்தத்தை நடத்துவதற்குப் பரலோகத் தூதர்களின் முன் தலைமையேற்று நிற்பார். — 3SM 426 (1890). கச 183.2

சாத்தான் தனது கலகத்தின் கடைசி வேலையில், தனது படைகளை யுத்ததிற்குக் கொண்டுவரும்பொழுது, நன்மைக்கு எதிரான அவனது பகைமை மிகவும் அதிகமாக வெளிப்படுத்திக் காண்பிக்கப்படும். தேவனுக்குத் தன்னை வைத்துக்கொள்ளாத ஒவ்வொரு ஆத்துமாவும், பரலோகத்திற்கு எதிராக சத்தானோடு ஒப்பந்தம் செய்துகொண்டு,அண்டசராசரத்தின் அதிபதியாகிய தேவனுக்கு எதிரான யுத்ததில் இணைந்துகொள்ளும். — TM 465 (1892). கச 183.3

வெகுவிரைவில் பூமியின் குடிகள் அனைவரும், பரலோகத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நிற்க, ஏதாவதொரு பக்கத்தைத் தெரிந்தெடுப்பார்கள். -7T 141 (1902). கச 183.4