Go to full page →

ஏழாவது வாதை கச 183

ஏழாவது கலசத்திலிருந்து ஊற்றப்படுவதைக்குறித்து நாம் படிக்க வேண்டும் (வெளி. 16:12- 21). தீமையின் வல்லமைகள் ஒரு போராட்டம் இல்லாமல் யுத்தத்தைக் கைவிடுவதில்லை. ஆனால், அர்மகெதோன் யுத்தத்திலே, ஆண்டவர் செய்யவேண்டிய காரியம் ஒன்ரு இருக்கின்றது. வெளி. 18- ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற தூதனுடைய மகிமையினால் பூமி பிரகாசிக்கப்படுகின்றபோது, மதம் சார்ந்த நன்மை தீமையான அனைத்து அடிப்படைக் கூருகளும் உறக்கத்திலிருந்து விழித்தெழும்; அதன் பின்பு, ஜீவனுள்ள தேவனுடைய சேனைகள் யுத்தக்களத்தினுள் பிரவேசிக்கும். — 7BC 983 (1899). அர்மகெதோன் யுத்தம் வெக்கு சீக்கிரம் நடக்கவிருக்கின்றது. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்ற நாமத்தைத் தமது வஸ்திரத்தின் மேல் தரித்திருந்த அவர், வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய் வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறிவருகின்ற பரலோக சேனையை நடத்திச் செல்வார் (வெளி 19:11- 16). — 7BC 982 (1899). கச 183.5

பூமி முழுவதும் சமுத்திரத்தின் அலைகளைப்போல மேலே துள்ளி எழும்பும். அதன் மேற்பரப்பு பிளவுபடுகிறது. அதன் அஸ்திபாரங்கள் பிளந்து வழி உண்டாக்குவதுபோல் தோற்றமளித்தன. மலைத்தொடர்கள் பூமிக்குள் புதைந்துகொண்டிருந்தன. ஜனங்கள் குடியிருந்த தீவுகள் காணாப்படாமற்போயின. துன்மார்க்கத்தினால் சோதோமைப்போல் மாறிப்போயிருந்த கடல் துறைமுகங்கள் மூர்க்கமான கடல் அலைகளால் விழுங்கப்பட்டன... உலகின் பெருமையான பட்டணங்கள் தாழ்த்தப்பட்டன. உலகின் பெரிய பெரிய மனிதர்கள் தங்களை மகிமைப்படுத்தும்படிக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைத்திருந்த கெம்பீரமான அரண்மனைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக நொறுங்கி அழிந்துபோயின. சிறைச்சாலையின் சுவர்கள் பிளந்துபோக, தங்களது விசுவாசத்தினிமித்தம் சிறைவைக்கப்பட்டிருந்த தேவனுடைய ஜனங்கள் விடுவிக்கப்பட்டனர். — GC 637 (1911). கச 184.1

*****