தேவனையும் அவரது சத்தியத்தையும் பரிசுத்தத்தையும் விரும்பாத,வெறுப்பினால் நிரப்பப்பட்டிருக்கும் இருதயங்கள், பரலோகக் கூட்டத்தோடு ஒன்றிணைந்து அவர்களது துதியின் பாடல்களைப் பாட முடியுமா? அவர்களால் தேவனுடைய மகிமையையும், ஆட்டுக்குட்டியானவருடைய மகிமையையும் தாங்கிக்கொள்ள முடியுமா? இல்லை, இல்லவே இல்லை; பரலோகத்திற்கேற்ற குணங்களை உருவாக்கும்படி வருடக்கணக்கில் கிருபையின் காலம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; ஆனால் தூய்மையை நேசிக்கும்படி அவர்கள் தங்கள் மனதை ஒருபோதும் பயிற்றுவிக்கவில்லை. பரலோகத்தின் மொழியை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதோ அது மிகவும் தாமதமாகிவிட்டது. தேவனுக்கு விரோதமான கலகத்தின் வாழ்க்கை அவர்களைப் பரலோகத்திற்குத் தகுதியற்றவர்களாக்கிவிட்டது. அதனுடைய தூய்மையும் பரிசுத்தமும், சமாதானமும் அவர்களுக்குக் கடும் சித்திரவதையாகவே இருக்கும். ஆதலால் அந்தப் பரிசுத்தமான இடத்திலிருந்து ஓடிவிடும்படியாக அவர்கள் ஏங்குவார்கள். அவர்களை மீட்பதற்காக மரித்தவரின் முகத்தினின்று தங்களை மறைத்துக் கொள்ளும்படியாக அவர்கள் அழிவை விரும்புவார்கள். துன்மார்க்கருடைய நித்தியம் அவர்களது சொந்தத் தெரிந்துகொள்ளுதலினால் முடிவுசெய்யப்பட்டது. பரலோகத்திலிருந்து வெளியேற்றப்படுவது அவர்கள் தாங்களாகவே விரும்பிப் பெற்றுக்கொண்டதும், தேவனுடைய சார்பில் நீதியும் கிருபையும் நிறைந்த செயலாக இருக்கும். — GC 542, 543 (1911). கச 205.4