உயிரோடிருக்கின்ற நீதிமான்கள், “ஒரு நொடியிலே, ஒரு இமைப்பொழுதிலே” மறுரூபமடைவார்கள். தேவனுடைய குரலைக் கேட்டதும் அவர்கள் மகிமையடைந்தார்கள். இப்பொழுது அழியாமையையும் தரித்தவர்களாக, உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களோடுகூட ஆகாயத்தில் ஆண்டவரைச் சந்திப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். தூதர்கள் “அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்க் கிறார்கள்.” சிறு குழந்தைகள் பரிசுத்த தூதர்களால் சுமந்துவரப்பட்டு, அவர்களது தாய்மார்களின் கரங்களிலே ஒப்படைக்கப்படுகிறார்கள். மரணத்தினால் நெடுநாட்களாகப் பிரிக்கப்பட்டிருந்த நண்பர்கள், இனி ஒருபோதும் பிரியக்கூடாதபடிக்குச் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியின் பாடல்களோடு அனைவரும் சேர்ந்து மேலெழுப்பி, தேவனுடைய பட்டணத்தை நோக்கிச் செல்லுகிறார்கள். — GC 645 (1911). கச 205.5
நாங்கள் அனைவரும் ஒன்றாக மேகத்திற்குள் பிரவேசித்து, ஏழு நாட்களாகக் கண்ணாடிக் கடலை நோக்கிப் பிரயாணித்தோம். — EW 16 (1851). கச 206.1
அந்த இரதம் மேல்நோக்கி எழும்பினபோது, சக்கரங்கள், “பரிசுத்தர்” என்று சத்தமிட்டன. செட்டைகள் அசைந்தபோது, “பரிசுத்தர்” என்று சத்தமிட்டன. மேகத்தைச் சூழ்ந்திருந்த பரிசுத்த தூதர்களின் பரிவாரமும், ” சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!” என்று முழங்கினர். மேகத்திலிருந்த பரிசுத்தவான்களும், “மகிமை, அல்லேலூயா!” என்று ஆர்ப்பரித்தனர். — EW 35 (1851). கச 206.2
ஆ! அவரைத் தரிசிப்பதும், தேவனுடைய மீட்கப்பட்டவர்களாக அவரால் வரவேற்கப்படுவதும், எத்தனை மகிமையுள்ளதாயிருக்கும்! நீண்டகாலமாக நாம் காத்திருந்துவிட்டோம். ஆயினும், நமது நம்பிக்கை மங்கிப்போய்விடக்கூடாது. இராஜாவை அவரது மகிமையிலே காண்போமானால், நாம் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்போம். “வீட்டை நோக்கிச் செல்கிறோம்!” என்று உரத்த சத்தமாய் சொல்லி மகிழவேண்டும் என்பதுபோல நான் உணருகின்றேன்.- 8T 253 (1904). கச 206.3