Go to full page →

பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும் கிரீடங்களும் சுரமண்டலங்களும் கச 207

ஒரு மாபெரும் திரள்கூட்டமான தூதர்கள் மகிமையுள்ள கிரீடங்களை நகரத்திலிருந்து எடுத்துவருவதை நான் கண்டேன் ஒவ்வொரு பரிசுத்தவானுக்கும் ஒரு கிரீடம் உண்டு. அதிலே அவனுடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இயேசு கிரீடங்களைக் கேட்டபோது, தூதர்கள் அவைகளை அவரிடத்தில் கொண்டுவந்து கொடுத்தார்கள், இனிமையான இயேசு, தமது சொந்த வலது கரத்தினால் அவைகளை எடுத்து பரிசுத்தவான்களுடைய தலைகளிலே சூடினார். — EW 288 (1858). கச 207.1

கண்ணாடிக் கடலிலே 1, 44, 000 பேரும் பூரண சதுரவடிவில் நின்றார்கள். அவர்களில் சிலர் மிகவும் பிரகாசமான கிரீடங்களைப் பெற்றிருந்தனர். மற்றவர்களது கிரீடங்கள் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. சில கிரீடங்களில் ஏராளமான நட்சத்திரங்களும், சிலவற்றில் வெகுசில நட்சத்திரங்களுமே பதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அனைவரும் தங்கள் கிரீடங்களைக்குறித்து மனநிறைவுடன் இருந்தார்கள். — EW 16, 17 (1851). கச 207.2

ஜீவ கிரீடம் நமது சொந்தக் கிரியைகளுக்கு ஏற்றவாறு, பிரகாசமாகவோ அல்லது மங்கலாகவோ; அநேக நட்சத்திரங்களுடன் ஜொலிக்கக் கூடியதாகவோ அல்லது ஒரு சில விலையுயர்ந்த கற்களால் ஒளி வீசக்கூடியதாகவோ இருக்கும். — 6BC 1105 (1895). கச 207.3

நட்சத்திரமில்லாத ஒரு கிரீடத்தோடு ஒருவரும் பரலோகத்தில் இரட்சிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். பரலோகத்தில் நீ நுழையும்போது, உன்னுடைய தூண்டுதலின்மூலமாக அங்கே வருவதற்கான நுழைவுரிமையைப் பெற்றிருக்கும் சில ஆத்துமாக்கள், அந்த மகிமையின் மன்றங்களில் இருப்பார்கள். — ST June 6, 1892. கச 207.4

தேவனுடைய நகரத்திற்குள் நுழையும் முன்னதாக, இரட்சகர் தம்மைப் பின்பற்றினவர்களுக்கு வெற்றிச் சின்னங்களைக் கொடுத்து, இராஜரீகக் குடும்பத்தினர் என்ற அவர்களது தகுதி நிலைக்கான அதிகார விருதுகளை அளிக்கிறார். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இந்தக் கூட்டம் தங்களது இராஜாவைச் சுற்றிலும் நடுவில் காலியிடமுள்ள சதுர வடிவில் வரிசையாக அணிவகுத்து நின்றது… பாவத்தின்மீது ஜெயங்கொண்ட அனைவரது தலைகள்மேலும், இயேசு தமது சொந்த வலதுகரத்தால் மகிமையின் கிரீடத்தை வைக்கிறார்… அவர்கள் ஒவ்வொருவருடைய கரத்திலும் வெற்றிவீரருக்கான குருத்தோலையும், மின்னுகின்ற சுரமண்டலமும் கொடுக்கப்படுகின்றன. அப்பொழுது முன்னிலைவகிக்கும் தேவதூதர்கள் தங்களது சுரமண்டலத்தை வாசிக்கத் துவங்க, அவர்களோடு சேர்ந்து மற்ற அனைவரும் தங்களது சுரமண்டலத்தை மிகத்திறமையாக வாசிக்க, கேட்பதற்கு இனிமையான சிறந்த இசையாக அது ஓங்கி எழும்புகிறது… கிரயம் கொடுத்து மீட்கப்பட்ட அந்தக் கூட்டத்தாருக்கு முன்பாகப் பரிசுத்த நகரம் இப்பொழுது இருக்கிறது. இயேசு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கதவுகளைப் பெரிதாகத் திறக்க, சத்தியத்தைக் கைக்கொண்ட ஜாதிகள் பிரவேசிக்கிறார்கள். — GC 645, 646 (1911). 1கிறிஸ்துவின் வருகைக்கு சற்று முன்னான காலகட்டத்தின்போது தேவனுடைய சத்தம் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டது. பார்க்கவும்: Great Controversy, pp. 632, 633, 636, 638, 640, 641. கச 207.5

*****