அந்நாளிலே மீட்கப்பட்டவர்கள் பிதாவின் மகிமையிலும், குமாரனின் மகிமையிலும் ஜொலிப்பார்கள். தேவதூதர்கள் தங்களது பொற்சுரமண்டங்களை மீட்டி, இராஜாவையும், அவரது வெற்றிச் சின்னங்களாகிய ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து வெளுத்தவர்களையும் வரவேற்பார்கள். வெற்றி முழுக்கத்தின் ஒரு ஆரவாரம் பரலோகம் முழுவதையும் நிரப்பும். கிறிஸ்து வெற்றிச் சிறந்தார். அவரது பாடுகளும் தியாகமும் வீணாகவில்லை என்பதற்குச் சாட்சிகளாயிருக்கின்ற, தம்மால் மீட்கப்பட்டவர் களோடுங்கூட, அவர் பரலோக மன்றங்களுக்குள் பிரவேசிப்பார். — 9T 285, 286 (1909). கச 206.4
விவரிக்க முடியாத அன்புடன் இயேசு தமது விசுவாசமுள்ள பிள்ளைகளை, அவர்களது கர்த்தரின் சந்தோஷத்திற்குள் வரவேற்பார். தமது வியாகுலத்தாலும் அவமானத்தாலும் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களை, மகிமையின் ராஜ்யத்தில் காண்பதே இரட்சகருடைய சந்தோஷமாயிருக்கும். — GC 647 (1911). கச 206.5
கிறிஸ்து தமது கிரியையின் விளைவுகளில் அதன் பலனைக் காண்பார். எந்த மனிதனாலும் எண்ணக்கூடாத அந்தப் பெருந்திரளான கூட்டத்தை, அவர் “தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடு மாசற்றவர்களாய்” (யூதா 1:24) நிறுத்துவார். யாருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டோமோ, யாருடைய ஜீவியம் கற்றுக்கொடுத்ததோ அவர், “தமது ஆத்தும வருத்தத்தின் பலனாகக் கண்டு திருப்தியாவார்” — ஏசாயா 53:11. — Ed 309 (1903). கச 206.6