Go to full page →

குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சியற்றவர்களின் இரட்சிப்பு கச 214

சிறுகுழந்தைகள் சாவாமையைத் தரித்தவர்களாய், தங்களது மரணப் படுக்கைகளிலுருந்து எழும்பி, உடனடியாக தங்கள் செட்டைகளை அடித்துப் பறந்து, தங்களது தாய்மார்களின் கரங்களுக்குச் சென்றடை வார்கள். இனி ஒருபோதும் பிரியக்கூடாதபடிக்கு, அவர்கள் மீண்டும் சந்திப்பார்கள். ஆனால் அங்கு அநேக சிறு குழந்தைகளுக்குத் தாய்மார்கள் இருக்கமாட்டார்கள். நாங்கள் பெருமகிழ்ச்சியான கீதத்தைத் தாய்மார்களிடமிருந்து கேட்பதற்குக் காத்திருந்தது வீணாயிற்று. தாயில்லாத அந்தக் குழந்தைகளை தூதர்கள் பெற்றுக்கொண்டு, அவர்களை ஜீவவிருட்சத் தண்டைக்கு நடத்திச் சென்றார்கள், - 2SM 260 (1858). கச 214.5

எல்லோரும் பரீட்சிக்கப்பட்டு, சோதனையின் மூலம் தங்களது குணம் தீர்மானிக்கப்படவேண்டும் என்றிருக்கும்போது, குணம் பரீட்சிக்கப்படாத விசுவாசிகளான பெற்றோர்களின் சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்படுவார்களா? என்று சிலர் கேள்வியெழுப்பினர். “சிறுபிள்ளைகளுக்கு எப்படி இவ்வித பரீட்சையையும், சோதனையையும் வைக்கமுடியும்?” என்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது. எகிப்தியர்களின் தலைப்பிள்ளைகளின்மீது தேவன் தமது நியாயத்தீர்ப்புகளை அனுப்பியபோது நிகழ்ந்ததுபோல, விசுவாசிகளான பெற்றோர்களின் விசுவாசம் அவர்களது பிள்ளைகளை மூடும் என்பதே எனது பதிலாகும்... கச 215.1

அவிசுவாசிகளான அனைத்துப் பெற்றோர்களின் பிள்ளைகளும் இரட்சிக்கப்படுவார்களா என்பது பற்றி நாம் கூறமுடியாது; ஏனெனில், இக்காரியத்தைக்குறித்த அவரது நோக்கத்தை, தேவன் நமக்குத் தெரியப்படுத்தவில்லை. தேவன் விட்டுவிட்டதை நாமும் விட்டுவிடுவதும், அவரது வார்த்தையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள தலைப்புகளைக்குறித்து தியானமாயிருப்பதுமே நமக்குச் சாலச்சிறந்தாகும். — 3SM 313-315 (1885). கச 215.2

‘A’ என்பவருடைய காரியத்தைப் பார்க்கும்போது, அவர் இப்பொழுது இருக்கும் நிலையையும், அவரது எளிமையான தோற்றத்தையும், கண்டு நீங்கள் வருந்துகின்றீர்கள். ஆனால் அவரோ பாவ உணர்வற்றவராக இருக்கின்றார். மரபுவழியாக வந்த அனைத்து மனவளர்ச்சியற்ற தன்மையையும் தேவகிருபையானது நீக்கிப்போடும். அவர் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் மத்தியில் ஒரு சுதந்திரத்தை அடைவார். ஆனால் உங்களுக்கோ கர்த்தர் பகுத்தறிவைக் கொடுத்திருக்கின்றார். பகுத்தாராயும் திறனைப் பொறுத்தமட்டில், ‘A’ என்பவர் ஒரு குழந்தையாக இருக்கின்றார்; ஆனால் ஒரு குழந்தைக்குரிய பணிவும் கீழ்ப்படிதலும் அவரிடம் இருக்கின்றது. — 8MR 210 (1893). கச 215.3