Go to full page →

உண்மையுள்ள தாய்மார்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கச 215

நியாயசங்கம் உட்கார்ந்து, புஸ்தகங்கள் திறக்கப்பட்டு, மாபெரும் நியாயாதிபதியாகிய இயேசு, “நல்லது, உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே” என்ற தீர்ப்பை அறிவிக்கும்போது, அழியாத மகிமை பொருந்திய கிரீடம் ஜெயம் பெற்றவருடைய சிரசின்மீது வைக்கப்படுகின்றது. அநேகர் தங்கள் கிரீடங்களைக் கழற்றி, உயர்த்திக்காட்டி, தங்கள் தாய்மாரை சுட்டிக்காட்டி, “நான் இப்பொழுதிருக்கின்ற நிலைக்கு, தேவனுடைய கிருபையினால் என்னைக் கொண்டுவந்தவர் எனது அன்னையே; அவரது ஆலோசனைகளும், அவரது ஜெபங்களுமே என்னுடைய இந்த நித்திய இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தன” என்று கூடியிருக்கும் அண்டசராசரத்தின் முன்பாகக் கூறுவார்கள். —MYP330 (1881). கச 215.4

தங்கள் பிள்ளைகளைத் தங்களது முயற்சிகளின்மூலம் இயேசு கிறிஸ்துவுக்கென்று ஆதாயம் செய்த தாய்மார்களின் பெயர்களை, தேவதூதர்கள் என்றென்றும் அழியாப் புகழுடன் நிலைத்திருக்கச் செய்வார்கள் - CG 568 (1895). கச 216.1