Go to full page →

அனைத்து யுகங்களிலும் உண்மையாயிருந்தவர்களுடனும், தேவ தூதர்களுடனும் ஐக்கியம் கச 218

மீட்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில், தூதர்கள் செய்த ஊழியங்களைப் புரிந்துகொள்வர், தனது நடைகள் ஒவ்வொன்றையும் விழிப்போடு கவனித்த தூதன், ஆபத்து நாட்களிலே தனது தலையைப் பாதுகாத்த தூதன், மரண இருளின் பள்ளத்தாக்கிலே தன்னோடு இருந்த தூதன், தனது மரணப்படுக்கைக்கு இடத்தைக் குறித்து வைத்த தூதன் — ஆம், அந்தத் தூதனுடன் உரையாடல் நிகழ்த்தி, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலே இடைப்பட்ட தெய்வீகத் தலையீட்டின் சரித்திரத்திலும் கற்றுக்கொள்வதும், மனித இனத்தின் ஒவ்வொரு காரியத்திலும் பரலோகம் எவ்வளவு ஒத்துழைத்தது என்பதைக்குறித்து அறிந்துகொள்வதும் எப்படிப்பட்ட இன்பமான அனுபவமாக இருக்கும்! — Ed 305 (1903). கச 218.7

காணக்கூடியதும் காணமுடியாததுமான எப்படிப்பட்ட ஆபத்துக்களிலிருந்து, தேவதூதர்களின் குறுக்கீட்டினால் நாம் எப்படியெல்லாம் காக்கப்பட்டிருந்தோம் என்பதை, அந்த தெய்வீக ஏற்பாடுகளை நித்தியத்தின் வெளிச்சத்தில் நாம் காணும்வரை, அவைகளை ஒருபோதும் நாம் அறிந்துகொள்ள மாட்டோம். — DA240 (1898). கச 218.8

மனித ஆத்துமாவிலே தேவன்தாமே உருவாக்கி வைத்திருக்கும் அன்பும் இரக்கமுமாகிய மேன்மையான உணர்வுகள் அங்கே மிக உண்மையாகவும் மிக இனிமையாகவும் செயல்படும். பரிசுத்த ஜீவிகளுடன் தூய்மையான துறவு, யுகங்கள் நெடுகிலும் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுத்த உண்மைமிக்கவர்களுடனும் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட தூதர்களுடனும் கூடிய ஒத்திசைவான சமூக வாழ்வு, “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்தையும்” (எபே. 3:14) ஒன்றாக இணைக்கின்ற பரிசுத்தமான பிணைப்புகள் — ஆகிய இவைகளே மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சியை முழுமையானதாக்க உதவக்கூடியவைகளாகும். — GC 677 (1911). கச 219.1