Go to full page →

விழுந்துபோகாத சிருஷ்டிகளுக்குச் சாட்சிபகரல் கச 219

“மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்ய வந்தார்” (மத். 20:28). கிறிஸ்துவானவர் பூமியில் செய்த பணியே, பரலோகத்திலும் செய்யும் பணியாயிருக்கிறது. வரப்போகும் உலகத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் பரந்த சிலாக்கியமும் உயர்ந்த அதிகாரமுமே, இவ்வுலகத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதால் நமக்குக் கிடைக்கப்போகும் பலன் ஆகும். “நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 43:12). நித்தியத்திலும் நாம் அவருக்குச் சாட்சிகளாகவே இருப்போம். கச 219.2

எதற்காக யுகங்கள் நெடுகிலும் தொடரத்தக்கதாக இந்த மாபெரும் போராட்டம் அனுமதிக்கப்பட்டது? சாத்தானுடைய கலகம் வெளியான உடனேயே அவன் ஏன் அழிக்கப்படவில்லை? — தீமையோடு உள்ள தமது நடவடிக்கைகளில், தேவன் நீதியுள்ளவர் என்பதை அண்டசராசரமும் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே! மீட்பின் திட்டத்தில் உயரங்களும் ஆழங்களும் அநேகமுண்டு, அவைகளை நித்தியம் முழுவதுமாகக்கூட ஒருபோதும் விளக்கிச் சொல்லமுடியாது. எனவேதான் இவைகளை உற்றுப்பார்த்து ஆச்சரியப்பட, தேவதூதர்களும் ஆசையாய் இருக்கின்றனர். சிருஷ்டிக்கப்பட்ட அனைத்துச் சிருஷ்டிகளிலும், உண்மையாகவே மீட்கப்பட்டவர்கள் மாத்திரமே, பாவத்தோடு போராடுவது என்றால் என்ன என்பதை, தங்கள் அனுபவத்திலே அறிந்திருக்கின்றார்கள். தேவ தூதர்கள்கூட அடைய முடியாதவிதத்தில், அவர்கள் கிறிஸ்துவுடன்கூட பாடுகளை அடைந்து, அவருடைய பாடுகளின் ஐக்கியத்திற்குள்ளாகப் பிரவேசித்து இருக்கின்றனர்; மீட்பின் அறிவியலைப்பற்றிய சாட்சியை உடையவர்களாக அவர்கள் இருப்பார்களல்லவா? விழுந்துபோகாத ஜீவராசிகளுக்கு வேறெதைக் காட்டிலும் அதுவே அதிக மதிப்புடையதாயிருக்கும்! — Ed 308 (1903). கச 219.3