Go to full page →

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிபந்தனைக்குட்பட்டவை கச 26

தேவதூதர்கள், மனிதருக்கான தங்களது தூதுகளில், காலம் மிகவும் குறுகினதாயிருக்கின்றது என்றே எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள். அப்டிப்போலவே, எனக்கும் அது எப்பொழுதும் காட்டப்பட்ப்பட்டிருக்கிறது. இந்தத் தூதின் ஆரம்ப நாட்களில் நாம் எதிர்பார்த்ததைவிடவும், காலம் அதிகமாகவே நீண்டு கொண்டிருக்கின்றது என்பது மெய்தான். நாம் எதிர்பார்த்தவுடனேயே நமது இரட்சகர் வந்துவிடவில்லை. அப்படி யானால், கர்த்தருடைய வார்த்தை பொய்த்துப்போய்விட்டதா? ஒரு போதும் இல்லை! தேவனுடைய வாக்குத்தத்தங்களும் எச்சரிப்புகளும், ஒன்றுபோலவே நிபந்தனைக்குட்பட்டவை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் 2ஏரே. 18:7-10; யோனா 3:4-10.… கச 26.6

இஸ்ரவேல் புத்திரர் செய்தது போலவே, கீழ்ப்படியாமையினிமித்தம் நாமும் இந்த உலகத்திலே இன்னும் அநேக ஆண்டுகள் தொடர்ந்து இருக்கவேண்டியிருக்கலாம். ஆயினும், கிறிஸ்துவினிமித்தம் அவரது ஜனங்கள், தங்களது தொடர்ச்சியான சொந்தத் தவறான நடக்கையின் விளைவுகளைக்கொண்டு, தேவன்பேரில் குற்றஞ்சுமத்தி பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டிக்கொள்ளக்கூடாது. - Ev 695, 696 (1901). கச 27.1