Go to full page →

கிறிஸ்து எதற்காகக் காத்திருக்கின்றார் கச 27

கிறிஸ்துவாகிய தம்மை சபை வெளிப்படுத்தவேண்டும். என்று அவர் ஏக்கம் நிறைந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றார். கிறிஸ்துவின் குணாதிசயம் அவரது ஜனங்களில் பரிபூரணமாய் பிரதிபலிக்கப்படும்போது மாத்திரமே, அவர்களைத் தம்முடையவர்களாக உரிமைபாராட்டிக்கொள்ள அவர் வருவார். கச 27.2

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருப்பது மட்டுமல்ல, அதைத் துரிதப்படுத்துவதும் ஒவ்வொரு கிறிஸ்துவனுடைய சிலாக்கியமாகவிருக்கின்றது. அவரது நாமத்தை அறிக்கையிடுகின்ற அனைவரும், அவரது மகிமைக்கென்று கனிகள் கொடுப்பார்களானால், எவ்வளவு சீக்கிரமாக உலகம் முழுவதிலும் சுவிசேஷ விதை விதைக்கப்படும். வெகுசீக்கிரத்தில் கடைசி மாபெரும் அறுவடை முதிர்ச்சியடையும்; கிறிஸ்துவும் தமது விலையேறப்பெற்ற தானியத்தைக் கூட்டிச்சேர்க்க வந்திடுவார். - COL 69 (1900). கச 27.3

சுவிசேஷத்தை உலகத்திற்கு அளிப்பதின் மூலம், நமது கர்த்தருடைய வருகயை துரிதப்படுத்துவது நம்முடைய வல்லமைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. நாம் கர்த்தருடைய நாளை எதிர்பார்ப்பவர்களாக மட்டுமின்றி, அதைத் துரிதப்படுத்தவேண்டியவர்களாகவும் இருக்கிறோம். (2 பேது. 3:12). - EV 633 (1898). கச 27.4

அவருடன் சேர்ந்து ஒத்துழைப்பதின்மூலம், இந்த துன்பத்தின் காட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதை, நம்முடைய வல்லமையால் கூடும்படி அவர் செய்திருக்கின்றார். - Ed 264 (1903). கச 27.5