Go to full page →

ஆவிக்குரிய பெலவீனம் மற்றும் குருட்டாட்டத்தின் ஒரு காலம் கச 33

சபைகள் எங்கிலும் ஒரு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று, மின்னப்பாலிஸ் கூட்டத்தில் நாம் குறிப்பிட்டுருந்ததெல்லாவற்றிலும் உறுதியாயிருந்தேன். சபைகளில் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக செயலாற்றப்படவேண்டும். ஏனெனில், மாபெரும் வெளிச்சத்தினாலும், விசேஷித்த வாய்ப்புகள் மற்றும் சிலாக்கியங்களினாலும், ஆசிர்வதிக்கப்பட்டிருந்த ஜனத்தின்மீது ஆவிக்குரிய பெலவீனமும் குருட்டாட்டமும் நிலவியிருந்தது. சீர்திருத்தவாதிகளைப்போல அவர்கள் ஸ்தாபனம் சார்ந்த சபைகளைவிட்டு வெளியே வந்திருந்தனர். ஆயினும், அவர்களது முந்தைய சபைகள் செயல்பட்டதற்கு ஒத்ததான ஒரு பகுதியை அவர்கள் இபொழுது செயல்படுத்தினர். இன்னொரு வெளியேற்றத்திற்கான 3எலன் உவைட் அவர்களின் எழுத்திலிருந்து, ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபை ஸ்தாபனத்தின்மீதான நம்பிக்கையைத் தான் இழக்க நேரிட்டிருக்கலாம் என்று குறிப்பிடும் நன்கு அறிமுகமான வாக்கியம் இது ஒன்று மந்திரமேயாகும். இங்கே அம்மையார் வெளிக்காட்டியிருந்த சந்தேகம் அதற்கும் பிற்பாடு எஞ்சியிருந்த அவரது 26 ஆண்டுகால வாழ்க்கையில் ஒருபோதும் திருப்பிக் கூறப்படவில்லை. அவசியம் எழும்பாது என்று நாங்கள் நம்பினோம். சமாதானக்கட்டுகளினால் ஆவியின் ஒருமையைக் காத்துகொள்வதற்கு நாங்கள் ஜாக்கிரதையாயிருக்கும்போது, குருட்டுப் பிடிவாதத்திற்கு விரோதமாக எழுத்தால் அல்லது குரலால் எதிர்ப்பைத் தெரிவிப்பதை நாங்கள் நிறுத்தமாட்டோம். - EGW’ 88 356, 357 (1889). கச 33.6

தங்களது வெளிச்சத்திற்காகப் பெருமைப்பட்டுக்கொண்டு, அதே வேளையில் அதில் நடக்கத் தவறுகின்றவர்களைப்பற்றி கிறிஸ்து கூறுவதாவது: “நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப் பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன். வானபரியந்தம் (சிலாக்கியத்தின் அடிப்படையில்) உயர்த்தப்பட்ட (மாபெரும் வெளிச்சத்தைப் பெற்றிருக்கிற ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மக்களே) 4அடைப்புக்குறிகளிடப்பட்ட வாக்கியங்கள் எலன் உவைட் அவர்களால் சேர்க்கப்பட்டது. கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்படிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்” - RH Aug. 1, 1983. கச 34.1

சபை லவோதிக்கேயா நிலமையில் இருந்துகொன்டிருக்கின்றது. தேவனுடைய பிரசன்னம் அவள் நடுவில் இல்லை. - 1NL 99 (1898). கச 34.2