Go to full page →

தேவனுடைய திருச்சபையின் விசேஷித்த அதிகாரம் கச 33

தேவன் தமது சபைக்கு, விசஷித்த அதிகாரத்தையும் வல்லமையையும் அளித்திருக்கின்றார். அதை அவமதிப்பதாலும் அலட்சியம் செய்வதாலும் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை. அப்படிச் செய்யும்போது அவன் தேவனுடைய சத்தத்தை அலட்சியம் செய்கின்றான். - 3T 417 (1875). கச 33.4

வானத்தின் கீழே மிக உயர்ந்த வல்லமையை, தேவன் தமது திருச்சபைக்கு அளித்திருக்கின்றார். சபையில் அறிவுத்திறனுள்ள அவரது ஒருங்கிணைக்கப்பட்ட மக்களில் வெளிப்படுகின்ற தேவனுடைய சத்தமே மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். - 3T 451 (1875). கச 33.5