Go to full page →

1901 - ம் ஆண்டு ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தின் மறுமொழி கச 37

இந்த கான்ஃபரன்ஸ் கூட்டம் துவங்கியது முதல், நம் மத்தியில் இருந்தது யார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? இத்தகைய கூட்டத்தில் பொதுவாக காணப்படும் ஆட்சேபணைக்குரிய அம்சங்களை அப்புறப்படுத்தினவர் யார்? பரலோகத்தின் தேவனும் அவரது தூதர்களுமே ஆவர். உங்களை கிழித்து துண்டுதுண்டாக்குவதற்காக அவர்கள் இங்கே வரவில்லை. மாறாக, சரியான மற்றும் சமாதனம் நிறைந்த மனதை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே வந்திருந்தனர். தேவன் திட்டமிட்டிருக்கின்ற ஊழியம் தடைபடாமல் செய்யப்படு வதற்காக, அந்தகாரத்தின் வல்லமைகளை பின்னுக்குத் தள்ளி, தேவனுடைய கிரியைகளை நடப்பிப்பதற்காகவே, அவர்கள் நம் மத்தியில் இருந்தனர். தேவ தூதர்கள் நம் மத்தியில் கிரியை நடப்பித்துக் கொண்டிருந்தனர். கச 37.3

இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட திருப்பங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தது போல, நான் ஒருபோதும் என் வாழ்வில் அதிக ஆச்சரியமடைந்ததில்லை. இது நம்முடைய கிரியை அல்ல, தேவனே இதைச் செய்தார். இது சம்பந்தமான அறிவுரை எனக்கு அளிக்கப்பட்டது. ஆயினும், இக்கூட்டத்தின் சாராம்சம் நிறைவேறித் தீருமட்டும், அவ்வறிவுறையை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தேவதூதர்கள் இந்த கூட்டத்தில், மேலும் கீழுமாக நடந்து வந்திருக்கின்றார்கள். இதை நீங்கள் ஒவ்வொருவரும் நினைவிற்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் தமது ஜனத்தின் காயங்களை சொஸ்தமாக்குவார் என்று, தேவன் கூறியிருக்கின்றதை நீங்கள் நினைவிற்கொள்ளவேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். - GCB April 5, 1901, pp. 463, 464. கச 37.4

ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தின்போது, கர்த்தர் தமது ஜனத்திற்காக வல்லமையாய் கிரியை நடப்பித்தார். அந்த கூட்டத்தைக் குறித்து ஒவ்வொரு முறை நான் சிந்திக்கும்போதும், இனிமையான பக்திவிநயமான ஒரு உணர்வு என்மேல் படர்ந்து, என் ஆத்துமாவுக்கு ஒரு நன்றியுணர்வின் ஒளியை அனுப்புகின்றது. நமது மீட்பராகிய கர்த்தருடைய மதிப்பு வாய்ந்த செயல்களை நாம் கண்டிருக்கின்றோம். அவர் தமது ஜனத்திற்கு விடுதலையை அருளியிருக்கின்றபடியால், அவரது பரிசுத்த நாமத்தை நாம் துதிக்கின்றோம். - RH Nov. 26, 1901. கச 38.1

ஜெனரல் கான்ஃபரன்ஸ், எல்லா தனிப்பட்ட பகுதி அலுவலகங்களின் மீதும் அதிகாரம் செலுத்தாதிருக்கும்படியாக, ஒன்றியப்பகுதி அலுவலகங்களை (யூனியன் கான்ஃபரன்ஸ்) ஒழுங்குபடுத்தும் காரியம் அவசியமானாதாக இருந்திருக்கின்ரது. பகுதி அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், ஒரு மனிதன்மீதோ அல்லது இரண்டு மனிதர் அல்லது ஆறு மனிதர் மீதோ மையங்கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல; மாறாக, வெவ்வேறான பகுதிகளில் மனிதர்களின் ஒரு ஆலோசனைக் குழு இருக்கவேண்டியுள்ளது. 71901 -ல் நடந்த ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்தாபனரீதியான மாற்றங்கள் குறித்த அதிகப்படியான விவரங்கட்கு SDA Encyclopedia vol. 10 of the Commentary Reference Series), revised edition. P.1050 - 1053 - ஜப் பார்க்கவும். MS 26, April 3, 1903. கச 38.2