Go to full page →

எஸ்.டி.ஏ ஸ்தாபனத்தின் மீதுள்ள நம்பிக்கை மறு உறுதிசெய்யப்படுதல் கச 38

தேவன் ஸ்தாபித்திருக்கின்ற அஸ்திபாரத்தை, நாம் இப்பொழுது அடிகளால் அளக்க இயலாது. நாம் இப்பொழுது, எந்தவொரு புதிய ஸ்தாபனத்திற்குள்ளும் நுழையலாகாது. அப்படி நுழைவதென்பது சத்தியத்திலிருந்து மருளவிழுந்து போவதாக அர்த்தமாகும். - 2SM 390 (1905). கச 38.3

ஒரு ஜனக்கூட்டமாகிய நம்மை, தேவன் தமக்கென்று ஒரு விசேஷித்த சம்பத்தாயிருக்கும்படி அழைத்திருக்கின்றனர் என்று உலகம் முழுவதிலுமுள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மக்களிடம் சொல்லுவதற்கு நான் அறிவுறுத்தப்பட்டேன். பூமியின்மீதுள்ள தேவனுடைய சபை காலத்தின் முடிவு மட்டும் சேனைகளின் கர்த்தருடைய ஆலோசனையிலும் ஆவியிலும் ஒருமித்து பூரணமாக நிற்கவேண்டு மென்று அவர் நியமித்திருகின்றார். - 2SM 397 (1908). கச 38.4

சில நேரங்களில், ஊழியத்தின் பொதுவான நிர்வாகப் பொறுப்பையுடைய ஒரு சிறு கூட்ட மனிதர்கள், ஜெனரல் கான்ஃபரன்ஸ் என்ற பெயரில், தேவனுடைய ஊழியம் தடைபடும் விதத்தில் ஞானமற்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சித்தபோது, இத்தகைய சில மனிதர்களால் எடுத்து கூறக்கூடிய ஜெனரல் கான்ஃபரன்ஸின் குரலை, தேவனுடைய குரலாக நான் இனிமேல் கருத முடியாது என்று கூறியிருக்கின்றேன். ஆனால், ஊழியக்களத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகளாயி ருக்கும்படி, முறையாக நியமிக்கப்படுள்ள ஒரு கூட்ட மனிதராலான ஜெனரல் கான்ஃபரன்ஸின் தீர்மானங்கள் மதிக்கப்படக்கூடாது என்று நான் கூறவில்லை. கச 38.5

உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தேவனுடைய சபையின் பிரதிநிதிகள் ஜெனரல் கான்ஃபரன்ஸில் கூடும்போது, அதிகாரம் உடையவர்களாயிருக்க வேண்டும் என தேவன் வகுத்திருக்கின்றார். தேவன் தமது ஊழியத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காகத் திட்டஞ்செய்யக்கூடுகின்ற ஜெனரல் கான்ஃபரன்ஸின் அபிப்பிராயத்தையும் நிதானிப்பையும், சபைக்கே உரித்தான செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் முழுநிறைவாகக் கொடுத்திருக்கின்றார். சிலரோ, ஒரு மனிதனுடைய அல்லது ஒரு சிறு கூட்ட மனிதருடைய கருத்திற்கும் நிதானிப்பிற்கும் இசைந்துபோய், தவறிழைக்ககூடிய அபாயத்தில் இருக்கின்றார்கள். - 9T 260,,261 (1909). கச 39.1

சிறப்பான அதிகாரத்தையும் வல்லமையையும், தேவன் தமது திருச்சபைக்குக் கொடுத்திருக்கின்றார் என்பதனைக் கருதாமல் அவமதிக்கிற எவரும் நியாமானவராக நிரூபிக்கபட முடியாது. ஏனெனில், அப்படிச் செய்பவன் தேவனுடைய குரலை அவமதிக்கிறான். - AA164 (1911). கச 39.2

இஸ்ரவேலின் தேவன் தமது ஜனத்தை இன்னும் நடத்திக்கொண்டிருக்கின்றார்; முடிவுபரியந்தம் தொடர்ந்து அவர்களோடிருப்பார் என்பதை உணரும்பொழுது நான் உற்சாகமடைகின்றேன்; ஆசிர்வாதம் பெறுகின்றேன். 8ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் ஏழாம் நாள் அட்வெடிஸ்ட் சபைக்கு, எலன் உவைட் அவர்கள் கொடுத்த கடைசியான தூதிலிருந்து எடுக்கப்பட்டது. நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகள், மே மாதம் 27, 1913-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில், ஜெனரல் கான்ஃபரன்ஸ் தலைவர் டேனியல்ஸ் அவர்களால் வாசிக்கப்பட்டன. - 2 SM 406 (1913). கச 39.3