Go to full page →

ஆவிக்குரிய எழுப்புதல் இன்னமும் அவசியம் கச 39

(ஜெனரல் கான்ஃபரன்ஸின்) நம்பகமான பதவியில் இருக்கின்ற மனிதர்கள், தேவசித்தத்தையும் வழியையும் பின்பற்றியிருந்திருப்பார்களானால், கடந்த ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் (1910) என்னென்ன வேலைகள் செய்து முடித்திருக்க முடியும் என்று ஒரு நாள் மதிய நேரத்திலே அமர்ந்து எழுதிகொண்டிருந்தேன். பெரிய வெளிச்சத்தைப் பெற்றிருந்தவர்கள் அவ்வெளிச்சத்திலே நடக்கவில்லை. கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தவேண்டிய விதத்தில் மனிதர்கள் தங்களைத் தாழ்த்தவில்லை. எனவே, பரிசுத்த ஆவி அவர்களுக்கு அருளப்படாதிருந்தது. கச 39.5

நான் நினைவிழந்தபோது, இதுவரைக்கும்தான் எழுதியிருந்தேன். அப்போது பேட்டில் கிரீக்கில், நான் ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோன்று ஒரு தரிசனத்தில் காணப்பட்டேன். கச 39.6

அங்கேயிருந்த கூடாரத்தின் அரங்கத்திலே கூடியிருந்தோம். ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. மிகவும் ஊக்கமான விண்ணப்பங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்டன. அக்கூட்டம் ஆவியானவரின் பிரசன்னத்தால் அடையாளப்படுத்தப்பட்டது... கச 39.7

மனமார்ந்த பாவ அறிக்கை பண்ணுவதற்கு, யாதொருவரும் அதிக பெருமையுடையவர்களாக காணப்படவில்லை. செல்வாக்கு பெற்றிருந்தவர்களும், ஆனால் முன்பு தங்களது பாவங்களை அறிக்கை செய்வதற்கு தைரியம் இல்லாதவர்களாய் இருந்தவர்களுமே, இந்த வேலையை முன்னின்று நடத்தியவர்களாயிருந்தார்கள். கச 39.8

அக்கூடாரத்தில் முன்பு ஒருபோதும் கேட்ரிராத அளவு, மிகுந்த சந்தோஷம் கேட்கப்பட்டிருந்தது. கச 40.1

அதன் பின்பு, நான் தரிசனத்திலிருந்து எழும்பினேன். சில மணித்துளிகள், எங்கே இருக்கின்றேன் என்று என்னால் யூகிக்க முடியாமல் போயிற்று. என் எழுதுகோல் இன்னும் என்னுடைய கரத்திலேயே இருந்தது. இப்படி நடக்கலாம். கர்த்தர் இவைகளையெல்லாம் தமது ஜனங்களுக்காகச் செய்ய காத்துகொண்டிருக்கிறார். பரலோகம் முழுவதுமே தயைபாராட்ட காத்துகொண்டிருக்கிறது என்ற வார்த்தைகள் என்னிடம் சொல்லப்பட்டன. ஒரு வேளை கடந்த ஜெனரல் கான்ஃபரன்ஸ் முழு நிறைவான வேலை செய்யப்பட்டிருக்குமானால், நாம் இந்நேரம் எங்கே இருந்திருப்போம் என்று யோசித்துப் பார்த்தேன். - 8T 104 - 106 (Jan 5, 1903). கச 40.2

இராக்காலங்களிலே, என் முன்னதாக கடந்துசென்று தரிசனங்களால் நான் மிகவும் ஆழமாக உண்ர்த்தப்பட்டேன். அநேக இடங்களிலே ஒரு மாபெரும் இயக்கம் - எழுப்புதலான ஒரு வேலை - முன்னேறிச் சென்றுகொண்டிருப்பதைபோல அங்கு காணப்பட்டது. நம்முடைய ஜனங்கள் தேவனுடைய அழைப்பிற்கு செவிகொடுத்தவர்களாக சரியான வரிசையில் சென்றுகொண்டிருந்தார்கள். 91913 - ம் ஆண்டு நடந்த ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்திற்கு எலன் உவைட் அவர்களின் முதலாவது தூதிலிருந்து எடுக்கப்பட்டது. - TM 515 (1913). கச 40.3