Go to full page →

வரப்போகின்ற நியாயத்தீர்ப்புகளைக் குறித்து தேவன் எப்பொழுதுமே எச்சரித்திருக்கின்றார் கச 7

வரப்போகின்ற நியாயத்தீர்ப்புகளைக் குறித்த எச்சரிக்கையை, தேவன் எப்பொழுதுமே மனிதர்களுக்குக் கொடுத்திருக்கின்றனர். தங்களது காலத்திற்கான தேவனுடைய தூதில் விசுவாசமுள்ளவர்களாயும், அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து தங்களது விசுவாசத்தைச் செயலாற்றியும் இருந்தவர்கள் கீழ்ப்படியாதவர்களின் மீதும், விசுவாசியாதவர்களின்மீதும் விழுந்த நியாயத்தீர்ப்புகளிலிருந்து தப்பியிருக்கின்றனர். கச 7.6

“நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்: இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” என்னும் வார்த்தை நோவாவிற்கு வந்தது. நோவா அதற்குக் கீழ்ப்படிந்தான்; அதனால் இரட்சிக்கப்பட்டான். எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்: கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகின்றார் என்னும் செய்தி லோத்துவுக்கு வந்தது (ஆதி. 7:1; 19:14). பரலோகத்தூதர்களின் பாதுகாவலிங்கீழ் லோத்து தன்னை வைத்துக்கொண்டதினால் காப்பற்றப்பட்டான். அவ்வாறே கிறிஸ்துவின் சீடர்களுக்கும், எருசலேமின் அழிவைப்பற்றிய எச்சரிப்பு கொடுக்கப் பட்டிருந்தது. வந்துகொண்டிருந்த அழிவிற்கான அடையாளத்தைக் கவனித்து எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அந்த நகரத்தை விட்டு ஓடிப்போய் அழிவிலிருந்து தப்பினார்கள். அவ்வாறே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை யைப்பற்றியும், உலகத்தின்மீது விழப்போகின்ற அழிவைப்பற்றியும், நாம் இப்பொழுது எச்சரிக்கப்பட்டிருக்கின்றோம். எச்சரிப்பிற்குச் செவி கொடுப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். - DA 634 (1898). கச 7.7