Go to full page →

நமது காலத்தில் எதிர்பார்க்க வேண்டியவை என்ன என்று தேவன் நமக்குச் சொல்லியிருக்கின்றார் கச 8

சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன்பாக, தாம் மரணத்துக்கு ஒப்புக் கொடுக்கப்படவிருந்ததையும், இரட்சகராகிய அவர் தமது சீடர்களுக்கு விளக்கின போது, அவர்களது மனங்களிலும் இருதயங்களிலும், அவரது வார்த்தையைப் பதியச் செய்ய தேவ தூதர்கள் அவ்விடத்தில் பிரசன்னமாயிருந்தனர். 1மாற்கு 8:31, 32; 9:31; 10:32-34. ஆனால் சீடர்களோ, ரோம ஆட்சியின் நுகத்திலிருந்து தற்காலிக விடுதலையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்; அவர்களது நம்பிக்கைகள் அனைத்திற்கும் மையமாக இருந்தவர் ஒரு அவமானமான மரணத்தைச் சந்திக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் நினைவுகூர்ந்து பார்க்கவேண்டிய அவரது வார்த்தைகள், அவர்களது உள்ளங்களிலிருந்து அகற்றப்பட்டிருந்தன. சோதனையின் நேரம் வந்தபோது, அவர்கள் ஆயத்தம் இல்லாதவர்களாக இருப்பதை அது வெளிப்படுத்தியது. இயேசுவின் மரணம் அவர்களை முன்னதாகவே எச்சரிக்காததுபோல அவர்களது நம்பிக்கைகளை முழுவதுமாக அழித்திருந்தது. கச 8.1

சீடர்களுக்கு கிறிஸ்துவின் வார்த்தைகளினால் எவ்வாறு எதிர்காலம் தெளிவாக்கப்பட்டிருந்ததோ, அவ்வாறே அது தீர்க்கதரிசனங்களின் மூலம் நமக்கு முன்பாகவும் தெளிவாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. தவணையின் காலத்தின் முடிவுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களும், இக்கட்டுக் காலத்திற்கென்று செய்யவேண்டிய ஆயத்தவேலையும், தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளன. ஆயினும் திரளான மக்கள், அவை ஒருபோதும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படாததைப் போன்று, இந்த முக்கியமான சத்தியங்களைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். — GC 594 (1911). கச 8.2