Go to full page →

கடைசிகாலத் தீர்க்கதரிசனங்களின்மீது அவசியப்படுகிற நமது கவனம் கச 8

பின்பு நான் மூன்றாம் தூதனைக் கண்டேன் (வெளி. 14: 9 -11). “அவனது வேலை பயங்கரமானது. அவனது பணி பக்திவிநயமானது. களைகளினின்று கோதுமையைப் பிரித்தெடுத்து, அதை முத்திரையிட்டோ அல்லது கட்டியோ பரலோகக் களஞ்சியத்துக்கென்று சோக்கின்றவன் இந்த தூதனே. இந்தக் காரியங்களே நமது முழு மனதையும் முழு கவனத்தையும் ஆக்கிரமித்திருக்க வேண்டும்” என்று என்னுடனே வந்த தூதன் சொன்னான். - EW 118 (1854). கச 8.3

நமது விசுவாசத்திற்கான காரணங்களைத் தெரியப்படுத்தவும், தேவனுடைய பிரமாணத்துக்கு நாம் உண்மையாயிருப்பதற்கான பதிலை அளிக்கவும், நீதிபதிகளுக்கு முன்பாக நாம் நிற்க வேண்டியிருக்கும். வாலிபர்கள், இந்தக் காரியங்களைக் குறித்து கண்டிப்பாகப் புரிந்து கொள்ளவேண்டும். கச 8.4

உலகத்தின் சரித்திரம் முடிவடைவதற்கு முன்பாக நிகழப்போகின்ற காரியங்களை, அவர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ளவேண்டும். இந்தக் காரியங்கள், நமது நித்திய நலனோடு தொடர்புடையவை. ஆசிரியர்களும் மாணவர்களும், இவற்றின்மீது அதிக கவனம் செலுத்தவேண்டும். - 6T 128,129 (1900). கச 8.5

நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற காலத்தைச் சுட்டிக்காட்டுகின்ற மாபெரும் அடையாளங்களை, நாம் கண்டிப்பாக ஆராய்ந்து படிக்க வேண்டும். - 4MR 163 (1895). கச 9.1

தேவனால் வழிகாட்டப்பட்டு வழிநடத்தப்படும்படியாக அவரது கட்டுப்பாட்டின்கீழ் தங்களை வைத்துக்கொள்கிறவர்கள், கண்டிப்பாக நடக்கவிருக்கின்ற, அவரால் நியமிக்கப்பட்டதான சம்பவங்களின் உறுதியான நிறைவேறுதலை அறிந்துகொள்வார்கள். - 7T 14 (1902). கச 9.2

மாபெரும் சீர்திருத்த இயக்கங்களில் தெய்வீக செயல்பாடுகளைக் குறித்து ஆராய்வதற்கும், மாபெரும் போராட்டத்தின் கடைசி யுத்தத்துக்காக தேசங்களை ஒருங்கிணைக்க நடைபெறுகின்ற சம்பவங்களின் வளர்ச்சியைக் குறித்து புரிந்துகொள்வதற்கும், தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை வரலாற்றிலே பார்த்து கண்டுகொள்ளவேண்டும். - 8T 307 (1904). கச 9.3