Go to full page →

புதிய ஸ்தாபனங்களை நிறுவுங்கள் கச 57

ஒரு சிலர், “கர்த்தர் அதிசீக்கிரம் வருகின்றதால் பள்ளிகளையும், சுகாதார மையங்களையும், உணவு தொழிற்சாலைகளையும் நிறுவ வேண்டியதின் அவசியம் என்ன? நம்முடைய வாலிபர்கள் தொழில்களைக் கற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியம் என்ன?” என்று கேட்கலாம். கச 57.4

கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கின்ற தாலந்துகளைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருக்கின்றது. அவைகளை உபயோகப்படுத்தாத பட்சத்தில், நாம் இதைச் செய்ய இயலாது. இயேசுககிறிஸ்து அதிசீக்கிரம் வரப்போகின்றார் என்கின்ற எதிர்பார்ப்பு நம்மை சோம்பலுக்குள் வழிநடத்திவிடக்கூடது. மாறாக, மனிதகுலத்திற்கு உபயோகமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும்படியாக, நம்மால் இயன்றளவு எல்லாவற்றையும் செய்வதற்கு அது நம்மை வழிநடத்தவேண்டும். — MM 268 (1902). கச 57.5

உலகம் முழுவதிலும் ஒரு மாபெரும் வேலை செய்யப்படவேண்டும். முடிவு சமீபமாயிருக்கின்றபடியால், தேவையின் காரணத்திற்கேற்ப பலதரப்பட்ட நிறுவனங்களை ஸ்தாபிக்க எந்த ஒரு விசேஷித்த முயற்சியும் அவசியமில்லை என்று ஒருவரும் முடிவுசெய்ய வேண்டாம்… ஜெபவீடுகள் கட்டுவதற்கும், புத்தகம் வெளியிடும் நிறுவனங்கள், சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் நிறுவுவதற்கும், மேற்கொண்டு இனி எந்த ஒரு முயற்சியும் எடுக்க வேண்டாம் என்று தேவன் சொல்லும் நேரமே, தேவன் வேலையை முடிக்கட்டும் என்று நம்முடைய கரங்களை நாம் கட்டிக்கொண்டிருப்பதற்கான நேரமாகும். ஆனால் இப்பொழுதோ, தேவனுக்காக நம்முடைய அதிக ஆர்வத்தையும், மனித இனத்திற்கு நம்முடைய அன்பையும் காட்டுவதற்கான நம்முடைய தருணமாகும். — 6T 440 (1900). கச 57.6