Go to full page →

மருத்துவ மிஷனெரி ஊழியம் கச 57

மார்க்க சம்பந்தமான கெடுபிடிகள் நம் நாட்டின் சுதந்திரங்களை கவிழ்த்துப்போடும்போது, மனசாட்சியின் சுதந்திரத்திற்காக நிற்பவர்கள் சாதகமற்ற நிலைகளில் வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் இருக்கும்போதும், தங்களின் சொந்த நன்மையைக் கருதி நோய்களைக் குறித்தும், அதனுடைய காரணங்கள் குறித்தும், நோய்த்தடுப்பு மற்றும் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முறை போன்றவை குறித்தும் அறிவுத்திறன் பெற்றிருக்கவேண்டும். மேலும் இப்படிக் கற்றுக்கொள்பவர்கள், எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யக் கூடிய ஒரு இடத்தைக் கண்டு கொள்வார்கள். நம்முடைய சொந்த விசுவாசத்தின் மத்தியில் மாத்திரம் அல்ல, சத்தியம் அறியாதவர்கள் மத்தியிலும்கூட உதவி தேவைப்படக்கூடிய துயருற்றோர் திரளானபேர் இருப்பார்கள். — CH506 (1892). கச 57.7

வெகு சீக்கிரத்தில் ஊழிய ரீதியிலான வேலைகள் செய்யப்படாமல் போகும். ஆனால், மருத்துவ ஊழிய வேலை தொடர்ந்து செய்யப்படும் என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். — CH 533 (1901). கச 58.1