Go to full page →

குடும்ப ஆராதனை கச 60

காலையிலும் மாலையிலும் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, அவரது துதிகளைப் பாடி, உங்களது குழந்தைகளுடன் இணைந்து தேவனை ஆராதியுங்கள். தேவனுடைய பிரமாணங்களை திருப்பிச் சொல்ல அவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். — Ev 499 (1904). கச 60.3

குடும்ப ஆராதனை செய்கின்ற நேரங்கள் சுருக்கமானதாகவும், அனலுள்ளதாகவும் இருப்பதாக. அதிக நேரம் ஆராதிப்பதினால் அவர்களுக்கு உண்டாகக்கூடிய சோர்வு அல்லது உற்சாகக் குறைவினிமித்தம், உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது குடும்ப அங்கத்தினர்களுக்கோ ஒருவித அச்சம் உண்டாக அனுமதிக்க வேண்டாம். வேதப் புத்தகத்திலிருந்து நீண்ட அதிகாரம் வாசிக்கப்பட்டு, விளக்கம் சொல்லப்பட்டு, நீண்ட ஜெபம் ஏறெடுக்கப்படும்போது, மதிப்புமிக்க இந்த ஆராதனை சோர்வடையச் செய்கிறதாய் மாறிவிடுகின்றது. ஆராதனை முடிந்த பின்பு ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டது போன்றதாக அது இருக்கும். கச 60.4

ஆர்வமூட்டக்கூடியதாயும், எளிதில் விளங்கிக்கொள்வதற்கேதுவானதாயும் இருக்கின்ற ஒரு வேதப் பகுதியை அக்குடும்பத்தின் தகப்பன் தெரிந்து கொள்ளட்டும். அந்த நாள் முழுவதுமாகப் படித்து நடைமுறைபடுத்தக்கூடிய ஒரு பாடத்தை அமைத்துக்கொடுக்கின்ற ஒரு சில வசனங்கள் போதுமானதாகும். குடும்ப ஆராதனையிலே கேள்விகள் கேட்கப்படலாம், ஒரு சில ஊக்கமான மற்றும் ஆர்வமான குறிப்புகள் தரப்படலாம். அல்லது மிக சுருக்கமாகவும் குறிப்பாகவும் படங்களைக் கொண்டு கருத்தை விளக்கிச் சொல்வதின்மூலம் ஒரு சம்பவம் கூறப்படலாம். ஒரு சில வசனங்களைக்கொண்ட எழுச்சியூட்டக்கூடிய பாடல் பாடப் படலாம். செய்யப்படும் ஜெபம் சுருக்கமானதாயும், தெளிவாய் சுட்டிக் காட்டப்பட்டதாயும் இருக்கவேண்டும். ஜெபத்தில் வழிநடத்துபவர் எல்லாவற்றைக் குறித்தும் ஜெபிக்கக்கூடாது. ஆனால், எளிய வார்த்தைகளால் தனது தேவைகளை எடுத்துக்கூறி நன்றியுடன் தேவனைத் துதிக்க வேண்டும். — CG 521, 522 (1884). கச 60.5